யாதுமானவன்
கட்டுண்டு
இருப்பின் என் கட்டை அவிழ்ப்பது எவ்வாறோ?
யாதும் அவன்
என்னுள் எனதை தேடிக்கொள்ள
கற்றுத்தருபவன் - அவன்
எல்லாம் என்னவென்ற கேள்விக்கும்
எல்லாவற்றிலும் நான் யார் என்ற
கேள்விக்கும் –
விடை தேட வழி சொல்பவன் – அவன்
மூன்றில் என்னை முதன்மை படுத்தி
உணர்ந்திட உதவுபவன் – அவன்
கட்டுண்டு
கிடப்பவன் அன்றே அவன்
சுதந்திரமானவன்
சூத்திரங்கள் உமிழ்பவன்
கர்மம் அறுத்தவன்
தர்மம் அறிந்தவன் – அவன்
கோடியில் ஒருவன் அல்ல என் குரு
கோடிக்கணக்கானோர் என் குரு.
No comments:
Post a Comment