Saturday, July 21, 2012

எதையும் நம்பிடேன்


வனே இல்லை எனில் என் தமிழ் வளர்ந்தது எவ்வண்ணம்
அவனை பரிகாசம் செய்யின்.,
திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் ஏற்றிய பாடல் கூற்று என்ன?
திருமூலர் சொன்னா திருமந்திரம் பொய்யென கொள்வேனோ?
இவன் பேச்சில் பெரிய புராணம் புதைந்துவிடின் என் தமிழ் என்னவாவது?
இன்னமும் கரம் பிடித்து தடுமாறி நடக்கும் – அறுவியல்
சொல்லும் நாள் வரை அவனை எண்ணாது இருக்குமோ என் மனம்
எல்லாம் அவன் என்றும்
அவன் என்னுள்ளும் என்ற பின்
இன்னும் தெருவில் தேடுவேனோ?
ஆனால் கையில் விதை இருக்க நிழல் கிட்டிடுமோ?
எடுத்து எரிந்து விட்டால் வளர்திடுமோ?
மூலவர் அவர் மந்திரமும்  இதுவன்றோ
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.
எம் பசுவும் பால் சொரியும்
வெறி ஐந்தும் அடக்கிட முடியும்
என்னை நான் மேய்ப்பேன்!
என்னை என்னுள் கண்ட பிறகு தெரியும் அவன் யார் என்பது
அதுவரை நம்பிடேன் யவர் கூற்றும்!
சொல்லும் சொல் வண்ணமே கேட்கையில் சிலிர்த்திடும் என் மனமே
நம்பிடாதே நம்பி நின்றிடாதே
கேட்கையில் கிட்டிடும் சிலிர்ப்பை காட்டிலும் பெரியது காண்போம்
மெய்யாய் நாம் உணரும் போது!
அதனால் நம்பிடேன் யவர் கூற்றும்!





--சித்ரன்

2 comments:

  1. என்ன மச்சுனு சொன்னா தானே புரியும்.. :D

    ReplyDelete