உலை கொதிப்பு போல் இவள் இயக்கம் இருக்கும்,
போட்டுத்தந்த பாதையில் மட்டுமே
இவள் பயணம் இருக்கும்,
அதிகம் ஒடிந்து போகமாட்டாள்,
அதிகம் உழைப்பில் களைக்கமாட்டாள்,
அதிகம் சுமப்பாள்,
யார் குருக்கிடினும்
இவள் கூர் வேகம் குறையாது,
இவள் பாதை இவளுக்கு மட்டுமே.
இப்படியும் ஒருத்தி வந்திருக்கிறாள்,
அதுவும் எப்போது என்பதை
எண்ணுதல் ஆச்சரியம் கூடும்.
எந்த பாதையிலும் சென்று,
வருவோர் போவோருக்கு வளைந்து கொடுத்து,
இப்படியாக இருந்தவர்கள் வாழ்த்த காலத்தில்
இவளும் வந்திருக்கிறாள் எனில் –
இவளை பெற்றவனை என்னவென்று வைதிருப்பர்!
பலர் சிலாகித்திருந்தாலும்
சிலராயினும் சீன்டியிருக்கலாம்!
ஆனால் இன்று,
அவள் இடுப்பை வளைத்து செல்லும்
அழகை பார்க்கமாட்டார் இல்லை,
தினம் தினம் பார்பவருக்கும்
பரவசம் குறையவில்லை
யாருக்கும் குறையாத அவள் கூர் வேகம் போல்,
விழியில் பிரமிப்பு போகவில்லை
அவளோடு பல முறை பயணம் செய்தும்.
நன்றி மீண்டும் வருக என இரு கரம் கூப்பி
சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்
அவளோடு பயணம் முடித்து
அவரவர் பாதை பார்த்து போவோருக்கு இன்று!
எப்போதோ எவனோ கொஞ்சம் மாத்தி யோசித்திருக்கிறேன்
மண்டைக்காரன் அவன்!
--சித்ரன்
உன்னால் பொதுவான விஷயங்களைப் பற்றியும் எழுத முடியும் என்று இப்பொழுதுதான் தெரிந்தது !! அதிலும் ரயிலை ஒரு பெண்ணாக பாவித்து தானே எழுதியிருக்கிறாய்! பிரதீப்பின் அடையாளம் இதுதானோ!
ReplyDelete