Sunday, October 2, 2011

என்னவள்!

லையில் விழும் நீரானது -
அங்கத்தோடு தழுவி அங்கங்கே தங்கிச் செல்வது போல்,
என் சிந்தையோடு தழுவி என்றும் தங்கிடுதல் அவள் ஆகுமோ!
பார்த்ததும் விழச் செய்திடும் அழகான அகண்ட கண்கள்
அதன் மேல்சீரான புருவமும், கூரான நாசியும் கொண்டு,
தாரான கூந்தல் முதுகு தாண்டி தொட்டிட்டால் அவள் ஆகுமோ..?
அதன் முன்புறம் அவள் அழகு கூட்டினல்
அவள் நகைக்க, இதழ் நினைக்க என் தொண்டை வற்ற செயல் அவளேன்றாகுமோ?
அடிமேல் அடி வைத்து அவள் நடக்க
என் காலம் நின்றுவிட்டால் அவளேன்றாகுமோ?
என் தவறினை ரசித்துத் திருத்திட்டால் தெரிந்திடுமோ அவள் என்று!?
இது எல்லாமோ நான் பார்ப்பேன்,
கோவம் கொள்ளும் வேளையில் என்னை போ எனச் சொல்லி,
மார்போடு சாய்ந்து அழும் அவளுக்கென்ன!
வர வேண்டாம் என சொல்லி எனக்காகக் காத்திருக்கும் அவளுக்கென்ன!
சிரித்தாலே மறைத்திடும் விழியானாலும்
எங்கிருந்தும் என்னை குத்திடும் அவளுக்கென்ன!
என்னை போல் என் மேல் காதல் கொள்ளுதல் போதாது
அவள் என்னவள் என நான் உணர்ந்திட!





Saturday, September 10, 2011

மழை இரவில்..!

னைத்தையும் தொட்டணைக்க வந்துக்கொண்டிருக்கும் மழையின் அறைகூவலாய்
அனைத்தையும் சுழலவைதுக் கொண்டிருந்தது காற்று!
வருகிறேன் என சொன்னதுதான் தாமதம் என்பது போல்,
விருட்டென வந்து கொட்டியது..
இந்த மழை..
எங்கோ சென்றுக்கொண்டிருந்த ஜோடியை,
அந்த பாலத்தின் அடியில் ஒதுங்க வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது!
பேருந்தில் சன்னால் ஓரம் தூங்கிகொண்டிருந்தவரை
சடாரென எழுப்பி விட்டு சிரித்தது மேகக் கூட்டம்!
வேகமாய் தன் கடையை பூட்டிக் கிளம்பியவரை
அதனினும் வேகமாய் திறக்கவைத்து,
சாலையோரம் சென்றுக்கொண்டிருந்தவரை தஞ்சம் அடையவைத்து,
அவர் மேல் சாரல் புன்னகை விசிக்கொண்டிருந்தது!
ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டும் வாழும்-
அற்ப ஜீவனாய் ரோட்டோராதில் உறங்கிக்கொண்டிருந்தவரை,
உதற வைத்து இரக்கமின்றி அவரிடத்தை ஈரமாக்கி விட்டிருந்தது-
தான் மண் மீது கொண்ட உரிமை பத்திரம் காட்டி!
கொஞ்சம் பயந்தார் போல் தான் வேகமாய் ஓடியது,
அவரிடத்தில் விழுந்த நீர் உரிமை நிலைநாட்டி இருப்பினும்!
சிலருக்கு அனந்த கண்ணீராக!
சிலருக்கு கொதி நீராக!
உலகிற்கு சம மழை என பெய்த போதும்,
பாகுபாடுகள் பல உண்டு இங்கு!
இரவோடு வந்ததால் இன்னமும் நெருக்கம் உண்டு
கொஞ்சம் வெறுப்போடு!
காலையும் கேட்கலாம் ஈரம் காய்தாலும்
இந்த திடீர் மழையை பற்றி
பலவாறான பேச்சுக்களை!
பார்த்ததை காட்டிலும் கொஞ்சம் அதிகமாய்!






Sunday, August 7, 2011

எது வரை கேட்கும்...!?

ம் பொறுமையின் குடம் தீரும்வரையில்..
இவர்தம் காதுகள் கேளாது! 
ஒருநாளில் குற்றம் குறைக்க மந்திரம் ஏதும் தெரியாத நாய் மந்திரி இவர்!
ஏதும் ஒருநாளில் நடந்திடாதெனில்,
விலை உயர்வு மட்டும் எப்படியோ..
காலைப் பத்திரிக்கையிலும், மாலை பத்திரிக்கையிலும்
மாறி மாறி ஒரேநாளில் ஏறிவரும்..?
கொஞ்சம் கொஞ்சமாய் பரவி,
தலையை தாக்கும் விஷம்...
உம்ம விலை உயர்வும் அதுபோல் தானே..?
கொஞ்சம் கொஞ்சமாய் பரவும் போது பாராளுமன்றத்தில் 
யார் பெண் மயிரில் பூச்சுடிக்கொண்டிருந்திர்..?
பணம் பணம் என கேட்டுப் பிடுங்கும்,
பரத்தையர் சேரியானது உம்ம அலுவலகம்
நீர் இன்னும் அறிந்திருக்கமாட்டீர்!
அமாவாசையும் எமகண்டமும் பார்த்து பார்த்து,
மனு வாங்கும் இடம் பெயர் அறிவாலயமாம்,
இவர் மூடநம்பிக்கை ஒழிக்கும் ஒளிதருவாரம்!
அம்மா என்ற சொல்லே கேடவார்தையாக்கிவிட்டார்!
எம் முதுகு தோல் உரித்து..
என்னகே இலவச செருப்பு தருவர் ..
அதன் அச்சு உம்ம கன்னத்தில் பதியும் நாள் வரும்!
நீர் போடும் சட்டமும் வரியும்,
வந்தவன்தான் ஏற்பாரோ இல்லை..
போபவன்தானே என பொருப்பாரோ!
போட்ட சாலைக்கு வாகனம் செல்ல வரியாம்
இதில் சுங்க வரி என்று ஒவ்வொரு முக்கிலும் இன்னும் கேட்பாராம்,
பணம் கொண்டவன் கட்டித் தொலைப்பான்,
மானம் கொண்டவனே தட்டிக் கேட்பான்!
கிழக்கில் விடியவில்லை என்றாலென்ன,
இதோ மேற்கே ஒளி தெரிகிறது.. 
உமக்கு கிலி காட்ட வரும்!
புரட்சிகள் மீண்டும் வரும்..
அன்னியருக்கு எதிராய் மட்டும் கண்டிருப்பீர் இங்கு,
இதோ ஆளத்தெரியாதவருக்கு எதிராய்
அதிகார போதையில் திளைப்பவருக்கு எதிராய்!
இன்னுமா கேட்கவில்லை உமக்கு அந்த சத்தம்
காதைத் திறந்துவையும்!
பெற்ற அப்பனே ஆனாலும்
தவறென்று பட்டபின் பாசம் அறுத்து
ஊர் பார்க்க உலகம் கேட்க
உடனே அவன் தலை கொய்யும் துணிவு வரும் வரை கேட்கும்..
இந்த ஈனம் கெட்ட நாய்களின் குரைச்சல்...!




Monday, July 11, 2011

சிவப்பு கிளிகள்!

மராவதி அவசரத்தால் அவர் இருவர் காதல் தோற்றதாக கூறுவர்..!
லைலாவின் மீது கொண்ட காதல் மஜ்னுவை பைத்தியமாக்கியது என பலவாராய் கூறினர்!
ரோமியோ ஜூலியட் காதல் விஷத்தாலும் குத்துவாளாளும் முடிந்தது என்ன சொல்லக் கேட்டதுண்டு!
இவர்கள் காதல் என்றும் வாழ்ததுவே அன்றி இவர்கள் அல்ல!
காதலோடு வாழ்தவர்களில் யான் அறிந்தது இவர்கள்..
இவர்கள் கல்யாணம் மூன்று மரபு வேலிகளை தள்ளிவிட்டு நடந்தது..
அவள் இவனைக் காட்டிலும் பல வருடங்கள் முன்னரே இந்த பூவுலகில் பூத்திருந்தால், முதல் வேலி..
அவள் சீமானின் புதல்வியாகவே பிறந்திருந்தாள்,
இவன் நடுத்தர குடும்பத்தின் நாயகனாகவே அவதரித்திருந்தான், என்றும் இருக்கும் இரண்டாம் வேலி..
அவளின் தந்தை கண்டு எடுத்த மணமகனோடு நடந்த நிச்சயத்தை முறித்து இவனை கை பிடித்தாள்.. மூன்றாம் வேலி!
செவ்வெனவே துவங்கிய வாழ்க்கை அந்த சிகப்பு சித்தாந்தத்தில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாய் துண்டானது!
இவனை மட்டும் அவள் நேசித்திருந்தால் இவன் என்றோ நின்றிருக்கக் கூடும்..
பிறந்த ஏழில் ஒன்று பெயர் வைக்கும் முன்னரே இறந்தது..
சவப்பெட்டி வாங்ககூட வழி இல்லாதவனாய் அவன் உலக சிந்தையில் இருந்தான்..
அவள் அப்போதும் அவனிடத்து காதல் குறையாது தான் இருந்தாள் - காரணம்
இவனின் சிதையில் சிந்தும் சிவப்பின் மேலும் அவள் காதல் பட்டுன்று இருந்தது!
அவள் மார்பிலும் வென் நிறப்பால் இன்றி அதிலும் அவன் சிகப்பே வழிந்த போதும் அவள் இருந்தாள் அவனோடு!
கார்ல் மார்க்ஸ்.. ஜென்னி கார்ல் மார்க்ஸ்..
மிகவுமாக அறியப்படாத சிவப்பு காதல் கிளிகள்!



Sunday, July 10, 2011

பிராணப் பெருங்கனல் . . . ! !

யாரும் விளக்கேற்றவில்லை..
தனி அறை இல்லை..
எதுவும் எச்சில் படவில்லை..
எந்தப் பழத்தையும் தேடிக் கடிக்கவில்லை..
இரு புறம் விரிந்த கைகளை தேடி பிடிக்கவில்லை..
உன் வியர்வை வாசம் உணரவில்லை..
உன் நெற்றியில் வியர்வை இல்லை..
ஆனால்...
உயிர் துளி விட்ட மூச்சு வாங்குதடி,
உன் கேசத்தின் வழி கடந்ததற்கே!




Monday, May 30, 2011

சந்திப்பு!

தும் நடந்திராது போல் தான் கேட்டு விட்டாய்..
'ஹே! எப்படி இருக்க?' என்று,
நானும் உண்மையை மறைத்து தான் சொல்லிவிட்டேன்,
'ம்.. நல்லா இருக்கே' என்று!
எதிர்பார்த்திருப்பாய் நானும் கேட்பேன் என,
அல்லது முறைக்காவது நான் கேட்டிருக்க வேண்டும்
நீ? எனவாவுது சின்னதாக ஒரு கேள்வி!
நீ எது பதிலாக சொன்னாலும் வலித்திடும் என்றே - உன்
அடுத்த கேள்வி வரை மௌன மொழி கொட்டித்தீர்தேன்!
'ம்' என சொன்னாலும் சரி,
'இல்ல டா' என நின்றிருந்தாலும்!
பிரிந்துசென்ற போது ஏற்பட்ட ரணத்தில் இயம் வார்தற்போல் எரிந்திருப்பேன்!
நானும் வழி கண்டுபிடித்து திரும்பி நடந்திருப்பேன்,
பார்த்ததும் தடுக்கிடும் கயல்விழி என இருந்திருந்தால்..
அந்த சின்னக் கண்ணில் நான் விழுந்தது எப்படி எனவே அறியாத போதே..
ஆராய்ச்சியில் நான் கிடந்த போதே ஏனோ சென்றுவிட்டாய்!
இன்னமும் கேட்கிறது கடைசியாக..
என் கரம் பிடித்து உன் கரத்தை அதில் புதைத்து நீ சொன்னது..
'பத்திரமா தானே இருக்கு... அப்படியே இருந்திட கூடாதானு தோணுது' - என
முடிக்கும் முன்னரே தழுதழுத்த உன் குரல்!



--சித்ரன்

Wednesday, April 13, 2011

கோடி மக்களும் 234 திருடர்களும்!

யார் எதற்கு என்று தெரியாதோர்,
தேர்தெடுக்கும் திலகம் வந்து தலை மேல் அமரும்!
ஒவ்வொரு பைசாவாக சேர்த்துக் கொடுத்து,
ஏதேனும் செய் என்றால், அவனவன் வீட்டிற்கு கட்டி கொண்டு போவான்-
தன் மானத் தலைவன்!
தாய் மொழி, பேய் மொழி என பாகம் பிரித்து,
மக்களை கோபத் தீயிலே நிற்க வைத்துவிட்டு,
ஓடிப் போய் இவன் மட்டும் ஒட்டிக்கொள்ளும்-
அஞ்ச நெஞ்சரும் இந்த 234-ல் உண்டு!
ஊழல் என்ற சொல் கேட்கும் போது மட்டும்,
ஈழம் சென்று திரும்பும் கண் கொண்ட-
மறவர்கள் இந்த 234-ல் உண்டு!
தான் செய்தது ஏதும் சொல்ல இல்லை என்றே,
அடுத்தவர் குறை மட்டும் கூறிடும்-
நெடு நாள் குமரிகளும் இந்த 234-ல் உண்டு!
தனியாக நிற்க துணிவில்லாமல்,
யாரோடும் சாய்ந்தே நிற்கும்-
சிவப்புத் துணி ஏந்திய சிங்கங்களும் இந்த 234-ல் உண்டு!
சாதிகள் இல்லை என்ன சத்தமிட்டுக் கொண்டே,
சாதி பெயரை மாட்டும் வைத்து வயிறு வளர்க்கும்
வைத்தியர்களிடம் கை கோர்த்திடும்-
சில்லறை பொறுக்கிகள் அதிகம் இந்த 234-ல்!
இவர்கள் வளர்வதற்கே தாய் மொழியும், தெய்வமும் தேவைப்பட்டது!
ஒன்றை தலையில் தூக்கி வைத்துக் கொண்டனர்,
மற்றதை காரணம் ஏதும் பார்க்காமல் தூக்கி எரிந்து மிதித்தனர்!
இனாம் இனாம் என இடுப்பில்-
கோவணமும் பறிப்பதை மறந்து கை நீட்டப் பழக்கிவர்
தன்மானத் தலைவர் என்பது தகுமோ! 
மாறி மாறி பொத்தான் அழுத்தியவன்,
அலுத்துப்போய் 49 'கேட்டானேயாயின்..
அதுவும் இல்லை இருப்பதில் குத்திவிட்டு போ என்பர்,
என் மக்கள் கண்ட ஜனநாயகம் இதுதானே!