இந்த அண்டத்தின் அழகுகளில் ஒன்றென இருக்கும்
இடம்
அறுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேல் இன்னமும்
குண்டுகள் தெறிக்க வாழுமிடம்
இன்னமும் சுதந்திரம் என்ற ஒன்றை முழுமையாக காணாத
இடம்
சொந்த நாடென மிக நேசித்தது சகாக்களின் வாழ்வை
சவமாக்கியும்
இன்னமும் அவ்விடத்தை கொண்டு என்ன செய்ய உத்தேசம்
என் தேசம் உரைத்தது இதுவல்லவே
இந்தியன் என்ற ஒரு சொல் தான் – அவர்கள்
கஷ்மீரில் வாழ இன்னமும் தடையாக இருப்பின்
அதை துறந்துவிடுகிறேன்!
No comments:
Post a Comment