சொந்த மண்ணில் பிழைக்க வழியில்லாமல்
என்றோ மனைவியை மீட்க கடந்த அந்த
கடல் கடந்து
ஆண்டுகள் நூத்துக்கு மேல் அங்கு வேர் ஊன்றி
உரிமைக்காக ஏங்கி
உறவை இழந்து
உரிமைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள்
ஒவ்வொருவராக மடிய
போராடியவர்கள் போர் குற்றவாளிகளாக
அவர்களுக்கு உரிய உரிமையும்
இல்லாமல்
இழிவாகக் கொல்லப்பட்டு
மிஞ்சிய மக்கள்
இன்று சொந்த மண்ணிலும் திறந்தவெளிச்
சிறையில்
இன்னமும் வாழ வழியில்லாமல்
காலம் கழிக்கும் அவர்களுக்கு –
தமிழ் தமிழ் என முழங்கி ஆட்சி
பிடித்தவர்கள்
மத்தியில் கிடைத்த பங்கிற்கு விலை
போய்
மொழிக்கு ரயில் மறியல் செய்தவர்கள்
அம்மொழி பேசும் மக்கள் மானம் இழந்த
போது
மொழியை செம்மொழியாக்கி
மார்தட்டியவர்களா
நியாயம் பேசுவார்கள்?
ஆள்பவர்கள் ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி நிலையம்
வைத்திருந்தும்
தம் மக்கள் அவலம் ஏதும் சொல்லாமல்
தீபாவளி பொங்கலுக்கு சிறப்பு படங்கள்
மட்டும் நிறுத்தாது போடவர்களா
நியாயம் பேசுவார்கள்?
அவலங்கள் பதித்த குருந்தகுடுகள்
வெளி வராது
வெளியிட்டவர்களை தண்டித்து
போராடியவர்களை கைதி செய்து
தம் மக்களை எரித்தவர்களின் கொடியை
எரித்தது குற்றம் என்றனர்.
தமிழ் பேசி கட்சி வளர்த்த இவர்கள்
மறைக்க நினைத்த
ஒவ்வொரு காட்சியையும் உலகிற்கு
காட்டி விட்டது
ஆங்கிலம் பேசும் தொலைக்காட்சி!
தமிழை டமில் என்று உச்சரிபவர்கள்
தான் இன்று குரல் கொடுக்கின்றனர்
தமிழர்களுக்காக..
புலம்பெயர்ந்தவர்களை கொல்ல ஆயுதமும்
ஆட்களையும்
தந்து தந்து உதவியவர்களா போர் முறை
தவறியவர்களை தண்டிப்பார்கள்?
தன் மண்ணில் பிழைக்க வழியில்லாமல்
சென்ற
சொந்த மகள்களை பலாத்காரம் செய்ய
பயிற்சி அழித்தவர்களா
நியாயம் பேசுவார்கள்?
சுதந்திரத்தின் போது கொடுத்த
அத்துணை வாக்கையும்
ஆண்டுகள் உருண்டோடியும் தலைகள் பல
உருண்டும்
சொந்த மண்ணிலேயே கைதிகளாய்
எந்த நடத்தைக்கும் சந்தேகத்துக்கு
உரியவர்களாய்
தினம் தினம் சொந்த கஷ்மீர் மக்களையே
ஏமாற்றி வரும்
இந்த இந்தியாவா
புலம்பெயர்ந்தவர்களுக்கு பிழைக்க வழி சொல்லிவிடும்?
No comments:
Post a Comment