ஒரு
முறை உண்டு
தினங்கள்
இரண்டு சுருண்டு கிடந்தேன்
உறவுகள்
எல்லாம்
மாதம்
கிழித்து எறியும் சட்டையென இருந்தேன்
என்
வட்டாரத்தில் யாரும் வரலாம்
யவரும்
தங்கிட முடியாது
யாரையும்
தாங்கிட நான் இல்லை என்றிருந்தேன்
ஒரு
முறை பட்ட சலனத்தில்
சிக்கி
இப்படி மாறினேனோ
இல்லை
இப்பிறப்பே எனக்கு இப்படிதானோ என்றிருந்தேன்
மகுடியாய்
வந்தாய்
சிரிக்க
வைத்தாய்
என்னை
நானே ரசித்தேன்
என்
கனவுகளை உணவாய் உண்டாய்
பாவம்
ஏதும் பார்க்காதவனுக்கு
பயம்
தொற்றிக்கொள்கிறது
என்
இருளினை எரித்து
காணாத
வெளிச்சம் தந்தாய்
காயத்திற்கு
மருந்து தேடாதவனை
உன்னோடு
பேச காரணம் தேட வைத்தாய்
இதுவரை
தனியாய் இரவும் பகலும் கடந்தவன்
இந்த
மகுடிக்கு
ஒவ்வொரு
நொடிக்கும் ஏங்கி
உற்றத்தோழனாய்
இருந்த தனிமைக்கு பயந்தவனானேன்!
No comments:
Post a Comment