Friday, August 29, 2014

சுதந்திரப் போராட்டம்

போட்ட சோற்றிற்கு வாலாட்டும்
காட்டிய இனையுடன் கட்டாய கல்யாணம்
பிறந்து ஈரம் உளறும் முன் விற்று காசு பார்ப்போம்...
நாம் பெற்றது வயதுக்கு வந்ததும்
திருமணம் செய்து வைப்போம்
வாங்கி வந்தவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வோம்...
யாருக்கும் யாரும் சுதந்திரம் தரத்தேவையில்லை
இருப்பதை பறித்து
பறப்பதைப் பிடித்து சிறு கூட்டில் அடைத்து
பறக்க விடாது வீசிய உணவை உண்ணச் சொல்வோம்
பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும்...
குலத்தில் குளித்து கொட்டிய மழையில் ஆற்றில் மிதந்து
முடிந்த தூரம் நீந்தி விளையாடியவர்களை
இரண்டடி கண்ணாடி பெட்டியில் அடைத்து
யாரென்றே அறியாதவர்களோடு நீந்தி விளையாட சொல்வோம்
ஆனால் நாம் நம் சமயம் தாண்டி பெண் எடுக்க மாட்டோம்...
சேர்க்கைக்கு வழி விடாது
வீட்டிற்குள் தொட்டி வைத்து வளர்ப்போம்
இவர்கள் புணர்ச்சியையும் அழிப்போம் - உணர்சிகள் அற்று
யாரோ நான்கு பேருக்காக வாழும் வித்தையை
ஒவ்வொரு உயிருக்கும் கட்டாய வகுப்பெடுபோம்...
நேசிக்கிறோம் என்று சொல்லும் சர்வாதிகாரிகள் நாம்
இவர்களுக்கு போராட சொல்லித்தர யாருமில்லையோ?
இவர்கள் போராடினால் பேசாக  நானே போஸாக
ராணுவ படை  செய்வேன்!



Wednesday, August 20, 2014

மௌனம் களையவிடு

ல்லா உறவுக்கும் பெயர் யார் சொல்ல
என் சிந்தை திருடும் உறவு இது
நான் எப்போது உன்னிடம் சொல்ல
கல்லுக்கடியில் காயாத ஈரத்தில்
துயிலும் சிறு வண்டு போல
உன்னோடு பேசிய
மங்காத நினைவுகளோடு பேசி பேசி
தினம் தினம் நான்
நீ இல்லாத நொடிகளை கொல்கிறேன்
நித்தம் யாவருடனும்
நான் பேசுவதே
உன்னை பற்றி என் சித்தம் குளிர
ஏதும் சொல்வார் என்றே
மறுமுறை பார்கையில்
உதட்டை சுளிக்காதே
காதோரம் சுருண்ட முடியை ஒதுக்காதே
நான் சொல்ல வந்ததை சொல்ல விடு!

Friday, August 8, 2014

தீண்டத் தொலைந்தேன்!

தீண்டின அடுப்புமேல வெச்ச பாலா பொங்குது எம்மனசு
நீ போன அப்பறம் தீஞ்சு போன வாசம் உன் நாசி எட்டியிருக்காது
நெடுந்தொலவு நானு கடக்கையில்
உன் நினப்புல தான் தொலச்சேன்
தொலைச்சது ஏதுன்னு தெரியல தேடிப்பார்க்க
போன இடம் போன பின்ன தெரிஞ்சது
வந்து சேர வேண்டிய இடத்ததா நானு தொலைச்சது
நீ உருட்டு அந்த கருவிழியில தானே என் பாதை நீளுது
சோகமோ இல்ல சிரிப்போ
எதுவோ ரகசியமா வெச்சா கூட
ஒடச்சு எட்டி பார்க்கற..
காரணம் கேட்டு சிரிக்கற
அப்புறம் காணாம போய்டற
எல்லோரு சுத்தி இருந்து
யாரும் இல்லாத இந்த பௌர்ணமி நிலவு கிட்ட நானு புலம்பி தவிக்கறே..
என் புலம்பல் கேட்டு கேட்டு அதுவும் இப்போ தேயுது!