“நம்மளும்
ஹோம் லோன் போற்றுக்கணும்” என்றார் துனை மேலாளர் (அசிஸ்டென்ட் மேனேஜர்).
ஒன்றும்
புரியாவதவனாய் “எதுக்கு, நீங்க இருக்கறது சொந்த வீடு இல்லையா?”
“அதுக்கில்ல
இந்த மாசம் டாக்ஸ் செமைய புடுச்சிருக்கானுங்க”
இடை
மறைத்த இன்னொருவர், “எவ்ளோ ஜி புடுச்சாங்க?”
“அம்பதாயிரம்
டா” என்றார்.
இந்த
மாதம் ஊக்கப் பங்கும் (போனஸ்) மாத வருவாயோடு சேர்ந்திருந்தது எனவே வரி சற்று
அதிகமாவே இருந்தது. இங்கு கடன் பெறுபவர்கள் பாதிக்கும் மேல் வரி கட்டுவதை
தவிர்க்கவே பெறுகின்றனர்.
இப்படி
ஆண்டுக்கு 50,000
எனில், மாதம் நாங்காயிரம். 50,000
வரி மட்டும் எனில் மொத்த வரவு எவ்வுளவு இருக்கும். இதில் மாதம் நாங்காயிரம் வரி தவிர்க்க கடன் வாங்கி இவர்கள் கட்டும் தொகை ஆண்டு
வருமானத்தில் பாதியை விழுங்கி விடும்.
எந்த ஒரு வீட்டுக் கடனானதும் குறைந்தது ஐந்து
ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்துவதாக இருந்தால் இழப்பின்றி வீடு வாங்கியாதாக கொள்ள
முடியும். இருபது, முப்பது ஆண்டுகாலம் அடைக்கப்படும் கடன்கள் யாவும் ஏமாற்று
வேலைகள்.
தோராயமாக 25
ஆண்டுகாலதிற்கு 25,00,000/- வீட்டுக் கடன்
பெறுபவர் மொத்தம் கட்டும் தொகை இருமடங்கை தொடும், அதாவது 40,00,000/- முதல் 50,00,000/- வரை. வட்டி சதவீதம்
எதுவாயினும் இதுவே நிலை. இதற்க்கு பல காரணங்கள்,
முதல் காரணம், முதலும் வட்டியும் சேர்த்தே மாதத் தவணை
கட்டுவோம். அப்படி கட்ட கட்ட உங்கள் வட்டி குறைய வேண்டும். பெற்ற கடனில் சிறுக
சிறுக முதல் அடைக்கப்பட்டு வரும், அடைக்கப்பட்ட முதலுக்கான வட்டி குறைய வேண்டும்.
ஆனால் பல வங்கிகள் முதல் தவணை முதல் இறுதி தவணை வரை வட்டியை குறைப்பது இல்லை.
அடுத்து, ரிசர்வ் வங்கியானது நிர்ணயிக்கும் சதவிகிதமே
அனைத்து வங்கிகளும் ஏற்று நடக்க வேண்டும். எந்த வட்டியும் சதவிகதமும் எந்த
நேரத்திலும் மாறலாம். இப்படி இருக்க வீட்டுக் கடன் வட்டி யாவும் மாறும். ஏறினால்
உங்கள் தவணை நீடிக்கப்படும் (25
வருடமாக இருந்தது 27, 30 என ஆகலாம்) அது கடனாளிகளுக்கு தெரிய படுத்த
அவசியம் இல்லை. அதே குறையும் போது வங்கி அதை கணக்கில் எடுத்துக்கொள்ளாது.
கடனாளிகளே அதனை ஏற்க மனு அளிக்க வேண்டும் அதற்க்கு தனியாக கட்டணம் உண்டு (4000
அ 6000 இப்படி).
வரியை
ஏய்க்க கடன் என்பது சரியான தீர்வு அல்ல. அதற்க்கு பல வழிகள் உண்டு ஆனால் வரி
என்பது நாம் நமக்காக சேர்க்கும் பணம். ஆயிரம் கோடி லட்சம் கோடிகள் ஊழல்
பெர்வளிகளால் போகிறது என காரணம், காரணம் மட்டும் சொல்வது சரி ஆகாது. பானை ஓட்டை என்றால்
அதனை அடைக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டும். ஓட்டை பானையில் நீர் விடுவது
எப்பேர்பட்ட முட்டாள்தனமோ அதே போல் வெறும் காரணம் மட்டும் சொல்வது.
No comments:
Post a Comment