கொண்டது
யாவும் – யாரும்
கொள்
கொள் என தந்தது இல்லை
தா
தா என யாசித்து பெற்றதும் இல்லை
கேட்டு
பெற வரமொன்றும் இல்லை
இது
வாழ்கை!
துச்சாதனன்
என துகில் உரிய முற்படும் நேரம்
மறு
முனையில் கண்ணன் என்றே வந்து துகில் தருவேன்
இரணியன்
என்று ஆர்பரிக்கும் பொருட்டு
பொறுக்காமல்
தூண் உடைத்து நரசிமம் பூண்டு
என்
அகந்தையை நானே கீறி உருவி உண்டு செரிப்பேன்
தன்னை
தானே கொன்று உண்ணும்
நான்
என்னை யாதெனக் கொள்வேன்?
நண்பன்
அவன் பின் நான் அமர்ந்து
சிரித்து
நீண்ட பாதையில் மகிழ்ந்து – உந்தி
வந்த
ஊர்தி முன் சென்றதன் பின் மோத
நீத்தான்
நண்பன், மீண்டு வந்தேன் நான்
எனக்கு
உயிர் தர அவன் முன் அமர்ந்து சென்றானோ
அவனை
கொல்ல நான் பின் அமர்ந்து எழுந்து வந்தேனோ
யாதெனக்
கொள்வேன்?
சொல்லாதீர்
பாவம் வந்து சேரும்
உமக்கு!
No comments:
Post a Comment