இக்ரிச்டோபர்
நோலன் படம் என்றாலே பிடிக்க வில்லை என சொல்லும் ஆள் யாரும் கிடையாது. ஒரு பக்கம் ‘செம
படம்’ என சிலாகிக்கும் கூட்டம். மறுப்பக்கம் ‘என்னதான்டா சொல்றான்’ என புலம்பும் கூட்டம். புரிந்தால் தானே பிடிக்காமல்
போக. நேற்று இரவு காட்சி ‘எனக்குள் ஒருவன்’, மொத்தம் இன்செப்சன் (Inception), கனவுக்குக் காரணம்
லிமிட்லேஸ் (Limitless) என இரு ஆங்கிலப் படங்களின் கலவை.
இதில் இயக்குனர் பங்கு நிறக்குருடு (color blindness) புதிதாக ஒன்றும் இல்லை, இப்படி படத்தை பற்றி கோபப்பட்டு வீட்டு வாசலில் இரவு இரண்டு
மணிக்கு நானும் நண்பனும் பேசிக்கொண்டு இருந்தோம்.
எங்களை
சுற்றி வளைத்தார் போல தெரு நாய்கள். ‘எங்கே இருந்து வருது இவ்வுளவு, அங்கே ஒன்னே
பாரு என்னமோ லையன் கிங் மாறி லைடிங்ல படுத்துட்டு இருக்கு’ என்றான் சுரேன். ஒரு
நாய் மட்டும் ஒய்யாரமாக காதுகள் சிலிர்த்து நிற்க, சோடியம் விளக்கின் கீழ் படுத்திருந்தது.
‘பின்னாடி
பாரு அங்கே செவுத்துல படம் வரஞ்சிருக்கே அதுக்கு அடுத்த வீட்ல வண்டிய வெளியே தான்
நிறுத்து வாங்க. நா அடிக்கடி பார்த்திருக்கேன் நைட்ல அந்த ஆளு தெருவுல ஒரு நாய்க்கு
மாட்டும் பிஸ்கடோ ஏதோ போட்டு அவன் வீட்டு முன்னால இருக்கற மாறி பார்த்துப்பான். இப்போ
எல்லா அந்த நாய் வந்தா இந்த நாய் அதை விரட்டுற்றான். என்னனு பார்த்தா அவரே ஒரு நாய்
குட்டி புடுச்சுட்டுவன்டாரு .’
‘pet lovers, care takers, என்னங்க டா டேய்.. அம்மா கிட்ட இருந்து குட்டிய புடுச்சுட்டு வந்து கட்டி
போட்டு சோறு போட்டா pet lovers’அ?’ என்றான்
‘போன
வெள்ளிக்கிழமை காலைல மாடில இருந்து பார்த்தேன், அந்த ஆளோட வைப் வாசல் தெளிக்க
முன்னாடி கேட் திறந்து வந்துது. வரும் போதே சத்தம், இது எல்லா யாரு வளிக்கறதுனு
கத்திகிட்டே வந்துது. வாசல் தெளிச்சதும் அதோட பொண்ணுகிட்ட இன்னு தண்ணி எடுத்துட்டு
வா கருமத்த கழுவனுனுச்சு. அந்த பொண்ணுக்கு அந்த குட்டி நாய் பார்த்த பயம் போல. அது
பாவம் சந்தோசமா குதிக்குது. அதுக்குள்ள அடுத்த வீட்டம்மா பொண்ணு கைல இருந்து தண்ணிய
புடிகிட்டு வந்து இது எல்லா சரி பட்டு வராதுன்னே. பேசமா துரத்தி விற்றுனுசு.
பாரேன் இவங்களுக்கு வேணும்னா அது அம்மா கிட்ட பால் குடுசுகிட்டு இருந்தத
புடிங்கிட்டு வந்துடறது இப்போ வேண்டானா தூக்கி ஏறியுறது. இதுக குழைந்த அசிங்கம்பன்னா
இப்டி தான் தூக்கி எறிவாங்களோ? இதுகெல்லா ஊர்ல எல்லோரும்
பெத்துகுக்ககாராங்களேனு
புள்ளைய பெத்து வழக்கறதுங்க.’ என்றேன்.
நாயோ
பூனையா ஒரு தாயின் ஏக்கம், குட்டிகளின் மன நிலை புரியாதவர்கள் பெரும் பேரு வேறு
என்னவாக இருக்க முடியும் என்றே தோணியது.
‘இந்த
நாய் எதுக்கு வந்துது நாம எதுக்கு வந்தோம்னு ஒன்னு புரியல இதுல ஆபீஸ்ல அது இல்ல
இது புரியலைன்னு வேற. எதுக்கு நட்பு இப்போ இங்கே வந்திருகோம்’ என்று பிரபஞ்ச ரகசியத்தை
ஒரு வரியில் கேட்டு முடித்தான்.
இக்ரிச்டோபர்
நோலன் படம் புரியாவிட்டால் என்ன, நாம் இங்கு இந்த புவியில் வந்தது எதற்கு, எதை
நோக்கி நம் பயணம், இறப்பு நம் பயணத்தின் முடிவா இல்லை அது அடுத்த நிலைக்கானா ஆரம்பமா?
இங்கு வருவதற்கு முன் தண்ணீர் நிறைந்த பெரும் குவளையில் நீந்தி வளர்ந்தோம்.
தொப்புள் கொடியில் உணவு உண்டோம், ருசியா கண்டோம், கண்டது மை இருட்டு, கேட்டிருந்த
ஒரே சத்தம் இதையத்துடிப்பு. ஈரைந்து மாதத்தில் அடுத்த நிலை.
படி
ஏறி இரண்டாவது மாடியில் இருக்கும் என் அறை வருவதற்குள் கருவரைமுதல் கல்லறை வரை
சென்று வந்தேன். காரணங்கள் விளங்கவில்லை.
படம்
பற்றி சமூக வலைத்தளத்தில் பதிய வைக்கும் ஆர்வத்தில் இருந்தேன், வெளியில் பூனைகளின்
சண்டையிடும் சத்தம். அவசரமாக புகைப்பட கருவியோடு ஓடினேன். நான் இருக்கும் அறைக்கு பின்னால்
ஒரு பூனை இரு குட்டிகளை ஈன்றிருந்தது. சில நாட்கள் அது விளையாட்டை, பால்
அருந்துவதை புகைப்படமாக பதிவு செய்திருக்கிறேன். அந்த தாயுடன் அது அறியா வண்ணம் உணவு
பகிர்ந்திருக்கிறேன்.
நான்
எதிர் பார்த்து ஓடியது வேறு ஒரு பூனை நான் ஊற்றிய பாலை குடிக்க வந்திருக்க சண்டை
துவங்கியிருக்கும் என்று. ஆனால் அங்கு வேறொரு பூனை இந்தத் தாயின் குட்டியை தூக்கிக்
கொண்டு ஓடியது. துரத்தி சென்று பாதியில் முடியாமல் அடுத்த வீட்டு கிணற்றின் மேல்
படுத்து தன்னை ஆசுவாசப்படித்திக் கொண்டிருந்தது. நான் அந்த குட்டிகள் இருக்கும்
இடத்தை பார்த்தேன். எச்சங்கள் இருந்தது, குட்டிகள் பயத்தில் கழித்திருக்கலாம்.
வேகமாக அறைக்கு ஓடினேன், கணினியில் பூனை மற்றொரு பூனையின் குட்டியை தின்னுமா? என தேடினேன். பெண்
பூனைகள் மற்றும் ஆண் பூனைகள் தின்னும் எனவும் அதற்க்கு பல காரணங்களும்
கூறப்பட்டிருந்தது.
பெண்
பூனைகள் தங்களின் குட்டி ஊனமாக இருந்தாலும். மற்ற குட்டிகளுக்கு பாலுட்ட ஏதும்
இல்லாத போதும் ஒரு குட்டியை தின்னுமாம். ஆண் பூனைகள் தன் கூட்டத்தில் இருக்கும்
பெண் பூனைகள் வேறு ஆணோடு கலவை கொண்டு பெரும் குட்டிகளை கொல்லுமாம். ஒரு
கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட ஆண் தேடி வந்து குட்டிகளை கொல்லும். கலவையின் போது
இடையுறாக இருந்தால், பல ஆண் குட்டிகள் இருந்தால் தன் நிலைக்கு ஆபத்து என்பதால்,
விளையாட்டின் போது சில நேரம் இரையை போல் நினைத்து கடித்துவிடுமாம் என பல கரணங்கள்.
மீண்டும்
வெளிய போய் பார்த்தேன். இப்போது குட்டிகளோடு விளையாடிய இடத்தில அந்த பூனை தனியே வந்து
படுத்திருந்தது. முன்னர் எல்லாம் நான் அந்த இடத்தை கடக்கும் போது ஒரு சீற்றம் இருக்கும்,
இப்போது ஒரு சலனமும் இல்லை அதனிடம். மீதி இருந்த பாலை அதற்க்கு ஊற்றினேன். வேறு
என்ன செய்ய எடுத்த படங்களையா தரமுடியும் ஞாபகத்திற்க்கு.
என்ன
காரணம் இருக்கும் இந்த தாயின் தனிமைக்கு? எதுவாயினும் அதுவும் ஒரு இயற்கையின்
கோற்பாடாகவே இருக்கும் வேறு என்ன இருக்க முடியும். கோட்படுகள் அறியப்படாத வரை பரிதாபம்
மட்டுமே மிஞ்சி இருக்கும்.
அந்த
தாய் மெல்ல கத்திக்கொண்டிருந்தது, அந்த ‘மியோவ்’ இப்போது வேறு மாறி கேட்டது.
No comments:
Post a Comment