Saturday, April 9, 2016

இந்திய பிரதமரின் பயணக்கட்டுரை

அமெரிக்க டாலருக்கு நிகராக அந்நாட்டின் பண மதிப்பு 20 லட்சத்தை தாண்டி சென்றது. அந்நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக கட்சி துவங்கி போர் படையும் திரட்டி போரிட்டான் அந்நாட்டின் குடிமகன். அதில் தோற்று கைதானாவனுக்கு ஐந்தாண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது அதுவும் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யவும் வாய்ப்பு தரப்பட்டு வெறும் இரண்டு ஆண்டுகளில் விடுதலை அடைந்தான். அந்த இரண்டு ஆண்டுகளில் அவன் எழுதிய சுயசரிதை எனது யுத்தம்’ என்ற தலைப்பில் வெளியானது. அதிலிருந்து அந்நாட்டு மக்களின் புரட்சி தலைவனென்றானான். அடுத்த ஒன்பது ஆண்டுகளில் 240,000 பிரதிகள் விற்பனையானது அவனது கட்சி மாபெரும் வெற்றியும் பெற்றது.

அடுத்த ஆறு ஆண்டுகளில் அண்டை நாட்டை கைப்பற்றும் எண்ணத்துடன் போர் புரிய துவங்கினான். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் உலக யுத்தர்திற்கு காரணமானான். இருந்தும் அவன் பதவி ஏற்ற நாளில் இருந்து ஒரு வருடதிர்குள்ளாக வேலை இல்லாதோர் எண்ணிக்கை ஆறு மடங்கு குறைந்தது. பொருளாதாரம் வலுபெற்றது.

ஒரு இனத்தை கொன்றது, உலக அமைதிக்கு ஊரு விளைவித்தது போன்ற பல குற்றச்சாட்டுகள் இருந்த போதும் பொருளாதரத்தில் தத்தளித்த தன் நாட்டை அதன் வளம் கொண்டே மீட்டவன் அவன், அடால்ஃப் இட்லர்.

அவன் எந்த நாட்டுக்கும் பயணிக்கவில்லை, வெளி நாட்டு முதலீடுகள் கொண்டு வரவில்லை. உள்நாட்டின் திறம் மேன்படுதப்பட்து நீர் அணைகள், போக்குவரத்து சாலைகள், தொழிற்சாலைகள் (உள்ளூர் தொழிற்சாலைகள்) நிறுவப்பட்டன. வேலை நேரம் நீடிக்கப்பட்டது. ஆனால் நாம் இன்றும் வெளிநாட்டு முதலீட்டுக்காக காத்திருக்கிறோம்.

வெளிநாட்டு வியாபாரிகள் இங்கு இந்தியாவில் கடை போடவும் தொழிற்சாலைகள் அமைக்கவும் வரி விலக்கு தரப்படுகிறது. இதில் அரசாங்க வருமானம் போகும். ஆனால் வேலை வாய்ப்பு கிட்டும் என சொல்லப்படுகிறது. மேலும் தடை இல்லா மின்சாரம் வழங்கப்படுகிறது இதில் மின் உற்பத்தியில் எந்த முன்னேர்படும் செய்யப்படுவதில்லை. எனவே பிற மாவட்டங்களில் மின் தடை செய்யப்பட்டு இவர்களுக்கு தடை இல்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் உள்ளூர் தொழிற்சாலைகள், சிறு வியாபாரிகள், நெசவு தொழில், அச்சு தொழில் என பல்வேறு தொழில்கள் முடங்கி சுய தொழில் செய்வோர் வேலை இழக்கின்றனர். மொத்தத்தில் சுய தொழில் செய்வோர் வேலை இழந்து தான் நாம் இன்று வெளி நாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறோம். எனவே வேலை வாய்ப்பு என்பதும் ஒரு போலித்தனமான பிம்பம்.

இது மட்டும் அல்ல நல்லுறவு மேன்படுகிறது என்றும் ஒரு பிம்பம் உருவாக்குகின்றனர். அப்படி எனில் இலங்கை ராணுவம் இந்திய மீனார்கள் (தேசிய ஊடக மொழியில் தமிழக மீனவர்கள்) மீதான தாக்குதல் நின்றிருக்க வேண்டும் அது இன்றும் தொடர் கதையாகவே உள்ளது. சீனாவின் தரமில்லா சந்தைகள் சங்கடம் இல்லாமல் இன்னும் கடை விரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

பசி என்று கதறுபவனுக்கு தாளிக்கும் வாசம் வந்திருந்தாலும் பொருத்திருப்பான். நம் பிரதமர் மளிகை சாமான்கள் வாங்கி வருவதாக சொல்லி தெரு முனையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

அன்றாடம் வாங்கும் காய் கறிகள், பால், பருப்பு போன்றவற்றின் விலை நிர்ணயத்தில் கணிசமான பங்கு போக்குவரத்துக்கு உண்டு. கச்சா எண்ணையின் விலை பாதாளத்தில் சென்ற போதும் சிறு ஆட்டம் காணாத நம் உள்ளூர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் மாதம் இருமுறை ஏற்றம் காண்கிறது. அதில் அக்கறை காட்டவில்லை வெளிநாடு பயணம் செய்யும் பிரதமர்.

source: http://www.mycarhelpline.com/
கருப்பு பணம் மொத்தமும் வரும் வரி இருக்காது என ஓட்டு கேட்டவர் இன்று நாட்டை தூய்மை படுத்த ஒரு புது வரி (Swachh Bharat cess at the rate of 0.5% on all taxable services on November 6 to be effective from November 15). கச்சா எண்ணை விலை குறைந்ததில்  சுமத்த பட்ட வரிகளில் இருந்து எடுத்திருக்கலாமே?

மாட்டிறைச்சி காரணம் சொல்லி ஒரு முதியவரை அவ்வூராரே அடித்து கொன்ற போதும், தலித் சிறுவகள் கொல்ல பட்டபோதும், ஒரு பல்கலைக்கழகம் தீவிரவாதிகள் கூடாரமாக சித்தரிக்க பட்டு கேலிக்கூத்தான போதும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அவர்களுக்கு எதிராக பேசியவர்களின் தலைகளுக்கு விலை வைத்த போதும் மௌனமே காத்தார் வெளிநாடு பயணம் செய்யும் பிரதமர். ஏதோ ஒரு மாநிலத்தில் நடக்கும் சில தவறுகளுக்கு எல்லாம் பிரதமர் பேச முடியாது எனில் யாரோ பதினோரு பேர் கொண்ட குழு மட்டையில் பந்தை அடித்து வெற்றி பெற்றதற்கு மாட்டும் வாழ்த்து சொல்ல நேரம் இருக்கிறதே வெளிநாடு பயணம் செய்யும் பிரதமர்க்கு.

அவர் நல்ல சூத்திரதாரி வாய் திறந்தால் தான் அது ஒரு செய்தியாகும் இவர் ஏதும் சொல்லாத போது இந்த ஊடகங்கள் அதை பற்றி பேசபோவது இல்லை. இவர்கள் பேசாத போது மக்கள் அதை பற்றி சிந்திக்க போவதும் இல்லை. எனவே வாருங்கள் அமைதியாய் கண்களை மூடி வெளி நாட்டு முதலீடு வருவதை உணர்வோம் எல்லோரும் யோகா தினம் கொண்டாடுவோம்.


(குறிப்பு: இதனால் இதற்க்கு முந்தைய காங்கிரச் ஆட்சி தேவலாம் என்று பொருள் கொள்ள வேண்டாம்.)

Wednesday, February 24, 2016

சின்னஞ்சிறு ரகசியமே!

என் பதியே என்னில் பாதியையா தந்தேன்
என்னோடு நீ கலந்ததில் தானே நானே முழுமையானேன்
உன் பாதை தேடி ஓடிவர - மோதிரம் தந்து
அனுமனை அனுப்பிவைக்க உன்னை தீக்குளிக்க வைக்கும் ராமனல்லவே நான்
பொழுதொன்று போனதும் களையும் ஆசையா கொண்டேன்
யார் விதைத்ததுவோ என்னுள் வளர்ந்தொங்கிய,
ஒவ்வொரு தேவையாய் கொன்ற பின்னும்
மிச்சமாய் நீயே நிற்கிறாய்!


Sunday, November 22, 2015

மழைத்துளி

ஒத்தத் துளியா மொத்தமா நினைசுடும்
கொட்டி தீர்த்த மழையா தொடாத இடமெல்லா நெளிஞ்சே போறே
உடுத்தின துணியா இன்னும் இருக்கமா என் மேல இருக்கே
உடம்பெல்லா ஊறி போன பின்னு
இன்னு உள்ளே சூடவே இருக்கேன்
நேரம் என்னனு ரெண்டு பேரும் கேட்கல
பொழியற மழை நேரங்காலமா பார்க்கும்
ஓடுற வெள்ளம் காடும் மலைய பார்த்தா நிக்கும்
கண்ணோட கண்ண வெச்சுகிட்டு
கையோடு கை வெச்சு அழுத்தி
காதோட மூச்சு காத்து அடிக்க சொன்னது
அடிவயிதுல எதிரொலிக்குது!

Saturday, September 19, 2015

இன்னு என்ன சொல்ல..

ந்த நெத்தியில நீ தீட்டும் பொட்டுக்குள்ள
நீண்டு கிடக்குறேன்.. எழுந்து தான் நீட்டி படுக்கறேன்..
திட்டு உன் கோவத்துல தீ மூட்டி குளிக்கறேன்..
உன் நினைப்பு சத்தியம்தானு காட்ட கருகி கிடக்கிறேன்..
காதோரமா சுருட்டி வைக்கும் அந்த கேசம் போதுமே,
நான் தூங்க அந்த நீண்ட சடை கூட வேண்டாமே..
கண்ண குத்துமுன்னா சாமிக்கு பொங்க வெச்சேன்,
நீ வந்து நின்னா போதுமுன்னு தானே
கோவில் வாசலிலே குத்தவெச்சேன்..
இன்னு சும்மாவே சுழட்டி பார்க்காதே,
அப்போ பார்த்த பார்வைக்கே வீடு தெரு மறந்து நிக்குறேன்..
இன்னு எங்கே போறே நானே இங்கே என்னை விதைச்சு வைச்சிருக்கையிலே
வாய துறந்து சொல்ல வாக்கு ஒன்னுமில்ல
நீ என்னை கடக்கு முன்னமே சிணுங்கி எனக்கு சொல்லும்
உன் வலவிக்கு தெரியும் நீ கேளு அதுவே சொல்லும்!

Monday, June 29, 2015

அன்னையவள் சொன்னது


ண்டென்று உளமார உணர்ந்துவிடின்
அதெதுவென ஆயிரம் ஆராய்தலென்ன
ஊராருக்கு உளமார உணர்த்த
ஊனில்லை அத்தெனதுமில்லை உனதுமில்லைவேறென்ன
வெள்ளமது வேகுண்டு வேகமெடுக்க
ஊரென்ன உழவனேன்ன
ஏரேன்ன ஏரிளுக்கும் எருதென்ன
வேந்தனென்ன வேட்டையாடும் வேங்கைதான்னென்ன
புவியனைத்தும் புரட்டி புரண்டோட
மீனதுவும் குஞ்சும் எதிர்த்து ஏகாந்தமாய்
நீந்தும் - நிர்காமல் நிலமது
புரளும் பொழுது – அது ஏனோ
மீனது உணர்ந்தது நீரது மட்டுமே
நீக்கமற தன்னை ரட்சிகுமென்று...
சாரதா அன்னையவள் தன் பிள்ளைக்கு சொன்னது தானே!

Friday, May 8, 2015

மௌனமான நேரம்

நான் பேசி ஒரு நாள் முடியபோகிறது.

யாரோடு பேசி?

யவரோடும்.

அலுவலகத்தில் நான் பார்த்து கொண்டிருந்த வேலையை வேறு இடத்துக்கு மாத்தம் செய்கின்றனர். என்னோடு சேர்த்து குறைந்தது ஒரு நூறு பேருக்கு இனி மூன்று மாதம் இருக்கும் நிறுவனதிலேயே வேலை தேடும் வேலை. ஒரு வேலை இந்த கால கட்டத்திற்குள் வேலை கிடைக்கவில்லை எனில் அடுத்த மூன்று மாதம் வெளியில் வேறு இடம் தேட வேண்டும்.

இந்த சோகத்தில் ஏதும் யாரோடும் பேசாமல் கழிகிறதோ நாட்கள்?

இல்லை, இதுவரை சுமார் இரண்டு ஆண்டு காலம் தனியாக தான் வசிக்கிறேன். தனிமை, நல்ல பரிச்சியமான வார்த்தையாகவே இருந்தது. கடந்த இருபத்தி எட்டு ஆண்டு வாழ்கையில் இன்றும் தோள் உரசி பேசும் தோழன் ஒருவன் மட்டுமே உடன் நடந்து வருகிறான். அவனுக்கு கல்யாணம் நிச்சியமாகிவிட்டது. இனி தோனியவுடன் அழைக்கும் ஒரு எண் ஒரே அலைபேசி எண் இனி சற்று யோசித்து தான் அழைக்க வேண்டும். எழுந்தவுடன் அவன் வீட்டு கதவை நானே திறந்து படுத்திருக்கும் அவனை எழுப்பி இருக்கிறேன். இனி கதவுகள் திறந்திருந்தாலும் தட்டி பதில் வந்த பிறகு தான் உள் நுழைய வேண்டும்.

தனிமை சிரிக்கிறது...

இது தான் இப்போதையே மௌன விரதத்திற்கு காரணமா?

இல்லை, கடந்த வெள்ளி அன்று நடந்த விபத்து. சிறு விபத்து தான், காலில் சின்ன சிராய்ப்பு, சனியும் ஞாயிரும் வெகு வேலை (தள்ளி போட்டிருக்கலாம், இருந்தும்) சற்று அமரவில்லை. இதனால் அடி பட்ட இடம் வீக்கம் கண்டது. இப்போது ஒரு வாரம் மட்டம்.


வேலை இல்லை என சொன்னவரிடத்து என்ன பெரிய வேலை. நேற்று வெளியே சென்று உண்ண பொருள் அனைத்தும் வாங்கி அடுக்கியாயிற்று யாரோடு பேச என்ன இருக்கிறது. காலை நீட்டி (மருத்துவர் சொன்னார் தொங்க விட்டு உட்கார கூடாதென்று) தெமே என கடந்தது மௌனமான நாள்.

Sunday, April 26, 2015

உன் விருப்பம் போல் ..

னக்காக எதையும் உதறி விட்டு
வந்தவள் அல்லவே நீ..
தான் கொண்ட ஆசைகளை
துடைத்தவளில்லை நீ..
நான் இறுக்கும் போது
வடியும் வியர்வையிலும்
தன் விருப்பும் வெறுப்பும்
அழியாமல் என்னை அனைத்தவள்..
நான் பதித்த எச்சி துடைக்கும் போதும்
உன் வண்ணம் அழியா வண்ணம் துடைத்தவளன்றோ..
பசியில் நான் பற்கள் பதித்த போது
வளர்த்து வைத்திருந்த நகத்தால்
என் புறத்தை கீரியவள்..
நின்னையா தேடினேன்
நீ விரல் கோர்த்த பின்னரே
தேடலின் உன்னதம் உணர்தேன்
உன் மனம் நீ கொண்ட பாதை
என் விரல் விட்டு நடந்தாய்..
சின்னஞ்சிறு ரகியமா நீ
இனி எல்லாமுமாய் – உன்னையும்
செரிக்கும் ஒருத்தி மடிசாய காத்திருக்கிறேன்!