பேருந்தில் நின்றிருந்த அம்மாவுக்கு
எழுந்து இருக்கை தருகிறேன்!
சாலையில் கால் இடறி
விழுந்த அம்மாவுக்கு கை கொடுத்து தூக்கி விடுகிறேன்,
அவர் பால் பொருட்களை பொறுக்கி தருகிறேன்!
வேகமாய் செல்லும் போதும் -
யாரும் வழி கேட்டல் நின்று பதில் சொல்கிறேன்!
கண் பார்க்க முடியாது -
வரும் பேருந்து எண் என்ன வென்று கேட்கும் அம்மாவுக்கு
நான் கடுப்பில் இருந்த போதும் நிதானமாய் பார்த்து சொல்கிறேன்!
எங்கோ நான் இல்லாது
தனியாய் பேருந்தில் போகும்,
தினம் சாலையை கடக்கும்
என் அம்மாவுக்கு – யாரேனும்
இது போல் உதவி செய்வர் என்ற சுயநலத்தோடு!
-- சித்ரன்