Monday, May 30, 2011

சந்திப்பு!

தும் நடந்திராது போல் தான் கேட்டு விட்டாய்..
'ஹே! எப்படி இருக்க?' என்று,
நானும் உண்மையை மறைத்து தான் சொல்லிவிட்டேன்,
'ம்.. நல்லா இருக்கே' என்று!
எதிர்பார்த்திருப்பாய் நானும் கேட்பேன் என,
அல்லது முறைக்காவது நான் கேட்டிருக்க வேண்டும்
நீ? எனவாவுது சின்னதாக ஒரு கேள்வி!
நீ எது பதிலாக சொன்னாலும் வலித்திடும் என்றே - உன்
அடுத்த கேள்வி வரை மௌன மொழி கொட்டித்தீர்தேன்!
'ம்' என சொன்னாலும் சரி,
'இல்ல டா' என நின்றிருந்தாலும்!
பிரிந்துசென்ற போது ஏற்பட்ட ரணத்தில் இயம் வார்தற்போல் எரிந்திருப்பேன்!
நானும் வழி கண்டுபிடித்து திரும்பி நடந்திருப்பேன்,
பார்த்ததும் தடுக்கிடும் கயல்விழி என இருந்திருந்தால்..
அந்த சின்னக் கண்ணில் நான் விழுந்தது எப்படி எனவே அறியாத போதே..
ஆராய்ச்சியில் நான் கிடந்த போதே ஏனோ சென்றுவிட்டாய்!
இன்னமும் கேட்கிறது கடைசியாக..
என் கரம் பிடித்து உன் கரத்தை அதில் புதைத்து நீ சொன்னது..
'பத்திரமா தானே இருக்கு... அப்படியே இருந்திட கூடாதானு தோணுது' - என
முடிக்கும் முன்னரே தழுதழுத்த உன் குரல்!



--சித்ரன்

Wednesday, April 13, 2011

கோடி மக்களும் 234 திருடர்களும்!

யார் எதற்கு என்று தெரியாதோர்,
தேர்தெடுக்கும் திலகம் வந்து தலை மேல் அமரும்!
ஒவ்வொரு பைசாவாக சேர்த்துக் கொடுத்து,
ஏதேனும் செய் என்றால், அவனவன் வீட்டிற்கு கட்டி கொண்டு போவான்-
தன் மானத் தலைவன்!
தாய் மொழி, பேய் மொழி என பாகம் பிரித்து,
மக்களை கோபத் தீயிலே நிற்க வைத்துவிட்டு,
ஓடிப் போய் இவன் மட்டும் ஒட்டிக்கொள்ளும்-
அஞ்ச நெஞ்சரும் இந்த 234-ல் உண்டு!
ஊழல் என்ற சொல் கேட்கும் போது மட்டும்,
ஈழம் சென்று திரும்பும் கண் கொண்ட-
மறவர்கள் இந்த 234-ல் உண்டு!
தான் செய்தது ஏதும் சொல்ல இல்லை என்றே,
அடுத்தவர் குறை மட்டும் கூறிடும்-
நெடு நாள் குமரிகளும் இந்த 234-ல் உண்டு!
தனியாக நிற்க துணிவில்லாமல்,
யாரோடும் சாய்ந்தே நிற்கும்-
சிவப்புத் துணி ஏந்திய சிங்கங்களும் இந்த 234-ல் உண்டு!
சாதிகள் இல்லை என்ன சத்தமிட்டுக் கொண்டே,
சாதி பெயரை மாட்டும் வைத்து வயிறு வளர்க்கும்
வைத்தியர்களிடம் கை கோர்த்திடும்-
சில்லறை பொறுக்கிகள் அதிகம் இந்த 234-ல்!
இவர்கள் வளர்வதற்கே தாய் மொழியும், தெய்வமும் தேவைப்பட்டது!
ஒன்றை தலையில் தூக்கி வைத்துக் கொண்டனர்,
மற்றதை காரணம் ஏதும் பார்க்காமல் தூக்கி எரிந்து மிதித்தனர்!
இனாம் இனாம் என இடுப்பில்-
கோவணமும் பறிப்பதை மறந்து கை நீட்டப் பழக்கிவர்
தன்மானத் தலைவர் என்பது தகுமோ! 
மாறி மாறி பொத்தான் அழுத்தியவன்,
அலுத்துப்போய் 49 'கேட்டானேயாயின்..
அதுவும் இல்லை இருப்பதில் குத்திவிட்டு போ என்பர்,
என் மக்கள் கண்ட ஜனநாயகம் இதுதானே!  



Sunday, March 27, 2011

நீண்ட இரயில் பயணத்தில் ஒரு சிறு காதல்!

நீண்ட இரயில் பயணம்,
சற்றுத் தள்ளி சன்னல் பக்கம் அவள்.
சிறிது தூரம் வரை மோதிக்கொல்லத்தான்வில்லை,
எங்கள் இரு விழிகள்!
யாரோ ஏதோ சொல்லக் கேட்டு நானும் சிரிக்க,
அவளும் என்னோடு கண் கலக்க,
இருவரும் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்க,
தொடர்ந்தது பயணம் மோதிக்கொண்டு!
கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நின்றேன்,
நண்பர்கள் அரட்டையில் இருந்து!
அவளும் கொஞ்சம் சிரிப்புமாய்,
கொஞ்சும் பார்வையுமாய்,
தோழிகளையும் என்னையும் பார்த்துக் கொண்டாள்,
அவை அடக்கமாக!
பேச்சுக்கள் வெட்டி வெட்டி போடப்பட்டன,
காற்றில் கலையாத முடியை
எனோ கைகள் சரி செய்து கொண்டே இருந்தன!
பேச்சிலே சேராத அவள், தூங்குவோம் என்றதும்,
இன்னும் கொஞ்சம் பேசுவோம் என்ன கெஞ்சினாள்!
ஒவ்வொரு முறை அவள் பார்வை என் மீது போர்த்தும் போதும்,
ஏதோ என்னிடமே தேடிப்பார்த்துக் கொண்டேன்!
கொஞ்ச நேரம் சன்னல் பக்கம் பார்வை போயினும்,
எதோ தொலைத்தவன் போல் பதறிப் போய் அவள் பக்கம் தேடினேன்!
தோழிகளின் தோள்களுக்கு இடையே இருந்து,
நடக்கும் வழியில் விழியால் நடந்து,
என் கண் வீடு அடைவாள் ஒவ்வொரு முறையும்!
வருவது தான் தொலைவு போல,
போவது சட்டென போய் சேர்த்து விடுவாள்,
யாரேனும் அவள் பேர் சொன்னாள்!
வந்து வந்து போய்கொண்டு இருந்ததில்,
நேரம் என்ன நொண்டியா..?
வேகமாக ஓடியது,
உறங்க போனோம் ஒன்றாக,
இரு குழுவும் தனித்தனியாக,
வேகமாக ஓடிய நேரம் எனோ நொண்டித்தான் நகர்ந்தது! 
விடுந்தும் விடியாமலும் எழுந்து
கதவோரம் காற்று வாங்கும் சாக்கில் நகர்ந்தால்
அங்கும் வரும் அசட்டு நண்பர்கள்!
தலை கொஞ்சம் மறைந்ததும்,
மறு கதவோரும் வந்து நின்று பார்வை போர்துவாள்...
என நான் நிற்க,
முடுச்சுகளோடு புடை சூழ இறங்கி நடந்தாள்,
அவள் பயணம் முடித்து!
இதுவும் காதல் தானே,
அவள் கடந்து போனதும்,
அவள் கொலுசு சத்தம் போல்
கனமில்லாமல் காற்றில் கசிந்து கரைந்து மறைந்து போனது,
அவள் பெயர் கூட நினைவில் நிற்க்காமல்!






Sunday, March 13, 2011

நான்

ல லட்சம் பேர்களை தள்ளிவிட்டு,
இலக்கு ஒன்றே குறியென பாய்ந்துத் தொட்டவன்,
லட்சம் உயிரை மாய்த்து குடத்தைக் குடைந்து அமர்தவன்..
சில ஆயிரம் பேரை கண்டோ திரும்பி நடைக்கட்டுவன்!
பாம்பின் கால் பாம்பு மட்டுமே அறிந்திடும் எனில்,
யானும் யாவரும் தாரிகை தான் முதலில்,
அவள் மனம் அறியேனோ!
யார் துணை உண்டு என்று அறியாமலே இதையம் துடித்தவன்,
எந்த வினைக்கு அஞ்சி நடிகிடுவேன்!
ஏதும் அறியாமல் நான் வரைந்தக் கோடு,
ரேகை என எதிர்காலம் சொல்லும் போது..
தூரிகையில் நான் போடும் கோடு அர்த்தம் பெறாதோ...
ஒரு குடம் நீரில் சில நூறு நாள் களித்தவன்,
இந்த குறு நிலம் ஆசையிலோ கர்மம் பிடிப்பேன்!
இருந்தது போதும் என்றே முட்டி முயற்ச்சித்து,
முகம் காட்டினேன்,
தோல்விக்குச் சுணங்கியோ முகவரி இழப்பேன்!
இருட்டுக் குடத்தில் சுருங்கிக் கிடந்தவனுக்கு,
பால் உண்ண கற்றுகொடுதவன் யார்..?
கங்கின் மேல் அமர்ந்து நெருப்பு மூட்டியது மாபெரும் துவக்கமாம்!
என் சிந்தைக்கு வழி காட்ட ஆள் வேண்டுமா!!?
துவக்கமே அறுத்துத் துவங்கிய போது,
உறவுகள் ஒட்ட வருவது எதுவரையோ..?
நீயின்றி நான் இல்லை என ஒட்ட வரும் உறவு,
என் பிறப்பு வரை வாழ்ந்தது எங்கனம்..
போகையில் அழைத்தால் வந்திடுமோ..?
கடைசியில் கடவுளே கதி என்றனரே,
படைப்பவன் தான் கடவுள் எனில்,
என்னை சுமந்தவளோ இல்லை சொட்ட விட்டவன் கடவுளோ..?
காப்பதும் அவனே எனில்,
என்னை காத்தவர் யாவரும் கடவுளோ...?
அழிப்பதும் அவனெனில்,
எதிரில் என்னை அழிக்க நிற்பவன் யாவனும் கடவுளோ...?
நானே எல்லாம் என்ற போதும்..
யாதும் என்றோ அவள் உருப்பு தானே,
இதில் ஆணாவது என்னவோ..
நானாவது என்னவோ..!?



Saturday, February 26, 2011

இதற்கேனவோ வந்தாய்!

தற்கென வந்தாய்...
யாரேனும் எதேட்சையாக என் அருகில் நின்றாலே,
முகம் மாற்றுகிறாய் என்னிடம் காட்டிக்கொல்லாமல்...
நீயாகவே வந்து கட்டிக்கொல்கிறாய் யாரும் பார்க்காமல்!
இதழ் எட்ட வந்தால் நாணத்தால் மூடிக்கொல்கிறாய்!
தூரத்தில் இருந்து நான் கேட்டால் கண் மூடித் திறந்து,
அணைத்த வெப்பம் தந்து செல்கிறாய்!
யாரோடும் நான் பேசினால்,
யார் பார்த்தலும் அறியாது என்னைச் சுடுகிறாய் சின்னக் கண்களால்,
நான் உன் கண் பார்த்து என்ன என புருவம் உயர்த்தினால்,
ஏதும் இல்லை என இடவலமாய் அசைகிறாய்!
நீ இல்லாமல் நடக்கையில் தெரிகிறது,
அழகு பெண்கள் எத்தனை நான் கடக்கிறேன் என்று!
எப்பொதும் ஒழித்தே வைகிறாய் உன் கையை என் உள்ளங்கையில்!
வெட்கப்படத் தெரியாது என்றாய்,
என் மூச்சு காற்று உன் முகம் தொட்டதும்,
என் சட்டையை இறுகப் பற்றிக்கொல்கிறாய்!
உன் சுவாசம் என்னைத் தீண்டவில்லை என்றதற்கு,
சாகடிகிறாய், முச்சு முட்டியது என்கிறாய்!
பிறந்தது என்னவோ ஆண் பிள்ளையாக,
நீதானே ஆளாகினாய் ஆம்பிளையாக!
இதற்கேனவோ வந்தாய்...


Sunday, January 30, 2011

விழிப்பதற்குள் வாழ்ந்துவிடுங்கள்!!!

ந்தவொரு சிறு தவறையும் பார்த்திராத கண்கள்..
எந்தவொரு தீங்கும் பேசிடாத செக்கச்சிவந்த உதடுகள்..
எந்த கரையும் படிந்திடாப் பிஞ்சு விரல்கள்..
என்னை பார்த்துச் சிரித்துச் சோரூட்டிக்கொண்டிருந்தது,
ஒவ்வொரு வாய்ச் சோற்றிலும் என் பாவம்..
என் அழுகை... சஞ்சலம்.. செத்துக்கொண்டிருந்தது..
கொஞ்சங்கொஞ்சமாய் ஊட்டியத்தில் கடைசி வாய் ஊட்டும்போது,
எதோ சொல்லச் சிவந்த வாய்த் திறந்தாள்..
அதற்குள் கண் விழித்துவிட்டேன், இன்றுவரை தெரியவில்லை,
அந்த உதடு சொல்ல வந்தது ஏதென்று..
எதுவாய் இருப்பினும் உடனே சொல்லிவிடுகிறேன் இப்போதெல்லாம்...
யாருக்குத் தெரியும் இந்தக் கனவு எப்போதுக் களையும் என்று!!!
யார் கனவில் வாழ்கிறோமோ,
எதுவாயிருப்பினும் சொல்லி விடுங்கள், சிரித்து விடுங்கள்..
அழுவதாயினும் அழுதுவிடுங்கள்..
கரம் பிடிபதாயினும் பிடித்து நடந்து விடுங்கள்..
தோள் சாய்வதாயினும் சாய்ந்துவிடுங்கள்..
கொடுப்பதாயினும் கொடுத்துவிடுங்கள், பெறுவது பெற்றுவிடுங்கள்..
அவர்கள் விழிப்பதற்குள்!


காதலிப்போர் யாரெனில்...

காதலிக்கும் வரை,
அவளுக்கு இவனும்.. இவனுக்கு அவளும்,
கடல் நீர் போல!
ஊரார் அறிய உரைத்து,
கரம் பிடித்த பின்னரே..
ஒருவருக்கு ஒருவர் ஊராற்று நீர் ஆவர்!!!