Sunday, November 22, 2015

மழைத்துளி

ஒத்தத் துளியா மொத்தமா நினைசுடும்
கொட்டி தீர்த்த மழையா தொடாத இடமெல்லா நெளிஞ்சே போறே
உடுத்தின துணியா இன்னும் இருக்கமா என் மேல இருக்கே
உடம்பெல்லா ஊறி போன பின்னு
இன்னு உள்ளே சூடவே இருக்கேன்
நேரம் என்னனு ரெண்டு பேரும் கேட்கல
பொழியற மழை நேரங்காலமா பார்க்கும்
ஓடுற வெள்ளம் காடும் மலைய பார்த்தா நிக்கும்
கண்ணோட கண்ண வெச்சுகிட்டு
கையோடு கை வெச்சு அழுத்தி
காதோட மூச்சு காத்து அடிக்க சொன்னது
அடிவயிதுல எதிரொலிக்குது!

Saturday, September 19, 2015

இன்னு என்ன சொல்ல..

ந்த நெத்தியில நீ தீட்டும் பொட்டுக்குள்ள
நீண்டு கிடக்குறேன்.. எழுந்து தான் நீட்டி படுக்கறேன்..
திட்டு உன் கோவத்துல தீ மூட்டி குளிக்கறேன்..
உன் நினைப்பு சத்தியம்தானு காட்ட கருகி கிடக்கிறேன்..
காதோரமா சுருட்டி வைக்கும் அந்த கேசம் போதுமே,
நான் தூங்க அந்த நீண்ட சடை கூட வேண்டாமே..
கண்ண குத்துமுன்னா சாமிக்கு பொங்க வெச்சேன்,
நீ வந்து நின்னா போதுமுன்னு தானே
கோவில் வாசலிலே குத்தவெச்சேன்..
இன்னு சும்மாவே சுழட்டி பார்க்காதே,
அப்போ பார்த்த பார்வைக்கே வீடு தெரு மறந்து நிக்குறேன்..
இன்னு எங்கே போறே நானே இங்கே என்னை விதைச்சு வைச்சிருக்கையிலே
வாய துறந்து சொல்ல வாக்கு ஒன்னுமில்ல
நீ என்னை கடக்கு முன்னமே சிணுங்கி எனக்கு சொல்லும்
உன் வலவிக்கு தெரியும் நீ கேளு அதுவே சொல்லும்!

Monday, June 29, 2015

அன்னையவள் சொன்னது


ண்டென்று உளமார உணர்ந்துவிடின்
அதெதுவென ஆயிரம் ஆராய்தலென்ன
ஊராருக்கு உளமார உணர்த்த
ஊனில்லை அத்தெனதுமில்லை உனதுமில்லைவேறென்ன
வெள்ளமது வேகுண்டு வேகமெடுக்க
ஊரென்ன உழவனேன்ன
ஏரேன்ன ஏரிளுக்கும் எருதென்ன
வேந்தனென்ன வேட்டையாடும் வேங்கைதான்னென்ன
புவியனைத்தும் புரட்டி புரண்டோட
மீனதுவும் குஞ்சும் எதிர்த்து ஏகாந்தமாய்
நீந்தும் - நிர்காமல் நிலமது
புரளும் பொழுது – அது ஏனோ
மீனது உணர்ந்தது நீரது மட்டுமே
நீக்கமற தன்னை ரட்சிகுமென்று...
சாரதா அன்னையவள் தன் பிள்ளைக்கு சொன்னது தானே!

Friday, May 8, 2015

மௌனமான நேரம்

நான் பேசி ஒரு நாள் முடியபோகிறது.

யாரோடு பேசி?

யவரோடும்.

அலுவலகத்தில் நான் பார்த்து கொண்டிருந்த வேலையை வேறு இடத்துக்கு மாத்தம் செய்கின்றனர். என்னோடு சேர்த்து குறைந்தது ஒரு நூறு பேருக்கு இனி மூன்று மாதம் இருக்கும் நிறுவனதிலேயே வேலை தேடும் வேலை. ஒரு வேலை இந்த கால கட்டத்திற்குள் வேலை கிடைக்கவில்லை எனில் அடுத்த மூன்று மாதம் வெளியில் வேறு இடம் தேட வேண்டும்.

இந்த சோகத்தில் ஏதும் யாரோடும் பேசாமல் கழிகிறதோ நாட்கள்?

இல்லை, இதுவரை சுமார் இரண்டு ஆண்டு காலம் தனியாக தான் வசிக்கிறேன். தனிமை, நல்ல பரிச்சியமான வார்த்தையாகவே இருந்தது. கடந்த இருபத்தி எட்டு ஆண்டு வாழ்கையில் இன்றும் தோள் உரசி பேசும் தோழன் ஒருவன் மட்டுமே உடன் நடந்து வருகிறான். அவனுக்கு கல்யாணம் நிச்சியமாகிவிட்டது. இனி தோனியவுடன் அழைக்கும் ஒரு எண் ஒரே அலைபேசி எண் இனி சற்று யோசித்து தான் அழைக்க வேண்டும். எழுந்தவுடன் அவன் வீட்டு கதவை நானே திறந்து படுத்திருக்கும் அவனை எழுப்பி இருக்கிறேன். இனி கதவுகள் திறந்திருந்தாலும் தட்டி பதில் வந்த பிறகு தான் உள் நுழைய வேண்டும்.

தனிமை சிரிக்கிறது...

இது தான் இப்போதையே மௌன விரதத்திற்கு காரணமா?

இல்லை, கடந்த வெள்ளி அன்று நடந்த விபத்து. சிறு விபத்து தான், காலில் சின்ன சிராய்ப்பு, சனியும் ஞாயிரும் வெகு வேலை (தள்ளி போட்டிருக்கலாம், இருந்தும்) சற்று அமரவில்லை. இதனால் அடி பட்ட இடம் வீக்கம் கண்டது. இப்போது ஒரு வாரம் மட்டம்.


வேலை இல்லை என சொன்னவரிடத்து என்ன பெரிய வேலை. நேற்று வெளியே சென்று உண்ண பொருள் அனைத்தும் வாங்கி அடுக்கியாயிற்று யாரோடு பேச என்ன இருக்கிறது. காலை நீட்டி (மருத்துவர் சொன்னார் தொங்க விட்டு உட்கார கூடாதென்று) தெமே என கடந்தது மௌனமான நாள்.

Sunday, April 26, 2015

உன் விருப்பம் போல் ..

னக்காக எதையும் உதறி விட்டு
வந்தவள் அல்லவே நீ..
தான் கொண்ட ஆசைகளை
துடைத்தவளில்லை நீ..
நான் இறுக்கும் போது
வடியும் வியர்வையிலும்
தன் விருப்பும் வெறுப்பும்
அழியாமல் என்னை அனைத்தவள்..
நான் பதித்த எச்சி துடைக்கும் போதும்
உன் வண்ணம் அழியா வண்ணம் துடைத்தவளன்றோ..
பசியில் நான் பற்கள் பதித்த போது
வளர்த்து வைத்திருந்த நகத்தால்
என் புறத்தை கீரியவள்..
நின்னையா தேடினேன்
நீ விரல் கோர்த்த பின்னரே
தேடலின் உன்னதம் உணர்தேன்
உன் மனம் நீ கொண்ட பாதை
என் விரல் விட்டு நடந்தாய்..
சின்னஞ்சிறு ரகியமா நீ
இனி எல்லாமுமாய் – உன்னையும்
செரிக்கும் ஒருத்தி மடிசாய காத்திருக்கிறேன்!

Sunday, March 22, 2015

யாதெனக் கொள்வேன்

கொண்டது யாவும் – யாரும்
கொள் கொள் என தந்தது இல்லை
தா தா என யாசித்து பெற்றதும் இல்லை
கேட்டு பெற வரமொன்றும் இல்லை
இது வாழ்கை!
துச்சாதனன் என துகில் உரிய முற்படும் நேரம்
மறு முனையில் கண்ணன் என்றே வந்து துகில் தருவேன்
இரணியன் என்று ஆர்பரிக்கும் பொருட்டு
பொறுக்காமல் தூண் உடைத்து நரசிமம் பூண்டு
என் அகந்தையை நானே கீறி உருவி உண்டு செரிப்பேன்
தன்னை தானே கொன்று உண்ணும்
நான் என்னை யாதெனக் கொள்வேன்?
நண்பன் அவன் பின் நான் அமர்ந்து
சிரித்து நீண்ட பாதையில் மகிழ்ந்து – உந்தி
வந்த ஊர்தி முன் சென்றதன் பின் மோத
நீத்தான் நண்பன், மீண்டு வந்தேன் நான்
எனக்கு உயிர் தர அவன் முன் அமர்ந்து சென்றானோ
அவனை கொல்ல நான் பின் அமர்ந்து எழுந்து வந்தேனோ
யாதெனக் கொள்வேன்?
சொல்லாதீர் பாவம் வந்து சேரும்
உமக்கு!

Sunday, March 15, 2015

உம்மூச்சுக் காத்து

வாழ்க்கை தரவனில்ல கடவுள்
வாழ கத்துத்தரவன் தான் கடவுள்
வாழ்க்கை எவனு
ஒரு நிமிச சந்தோசத்துக்கு தந்துட்டு போய்டலா
வெறு இருட்டுல...
எந்த கத்திரிக்காய்க்கோ இல்ல வெறு காமதுக்கோ
வாழ்க்கை தர முடியு..
பொறந்தது பொட்ட புள்ளைனு
பார்க்க வராதவன்
வளர வளர பக்கத்து வீட்டுக்கார.. எதுத்த வீட்டுக்கார
கூடவே வராத சொந்தக்காரனுக்கு பயந்து போய்
அத வழத்து கட்டிக் கொடுக்கும் போது மட்டு கண்ணீர் விடறவன் இல்ல..
வாழ கத்துத் தர உன் கூட விழுந்து
நீ அழும் போது அழுது..
அழ வெச்சவ கழுத்த எப்டி அறுக்கனுன்னு
கூடவே இருந்து கத்து எவன் தரானோ
அவன்தா சாமி
கடவுள்... உம்மூச்சுக் காத்து எல்லா..





Sunday, March 8, 2015

காரணங்கள் தேடிய இரவு!

க்ரிச்டோபர் நோலன் படம் என்றாலே பிடிக்க வில்லை என சொல்லும் ஆள் யாரும் கிடையாது. ஒரு பக்கம் ‘செம படம்’ என சிலாகிக்கும் கூட்டம். மறுப்பக்கம் ‘என்னதான்டா சொல்றான்’  என புலம்பும் கூட்டம். புரிந்தால் தானே பிடிக்காமல் போக. நேற்று இரவு காட்சி ‘எனக்குள் ஒருவன்’, மொத்தம் இன்செப்சன் (Inception), கனவுக்குக் காரணம் லிமிட்லேஸ் (Limitless) என இரு ஆங்கிலப் படங்களின் கலவை. இதில் இயக்குனர் பங்கு நிறக்குருடு (color blindness) புதிதாக ஒன்றும் இல்லை, இப்படி படத்தை பற்றி கோபப்பட்டு வீட்டு வாசலில் இரவு இரண்டு மணிக்கு நானும் நண்பனும் பேசிக்கொண்டு இருந்தோம்.

எங்களை சுற்றி வளைத்தார் போல தெரு நாய்கள். ‘எங்கே இருந்து வருது இவ்வுளவு, அங்கே ஒன்னே பாரு என்னமோ லையன் கிங் மாறி லைடிங்ல படுத்துட்டு இருக்கு’ என்றான் சுரேன். ஒரு நாய் மட்டும் ஒய்யாரமாக காதுகள் சிலிர்த்து நிற்க, சோடியம் விளக்கின் கீழ் படுத்திருந்தது.

‘பின்னாடி பாரு அங்கே செவுத்துல படம் வரஞ்சிருக்கே அதுக்கு அடுத்த வீட்ல வண்டிய வெளியே தான் நிறுத்து வாங்க. நா அடிக்கடி பார்த்திருக்கேன் நைட்ல அந்த ஆளு தெருவுல ஒரு நாய்க்கு மாட்டும் பிஸ்கடோ ஏதோ போட்டு அவன் வீட்டு முன்னால இருக்கற மாறி பார்த்துப்பான். இப்போ எல்லா அந்த நாய் வந்தா இந்த நாய் அதை விரட்டுற்றான். என்னனு பார்த்தா அவரே ஒரு நாய் குட்டி புடுச்சுட்டுவன்டாரு .’

pet lovers, care takers, என்னங்க டா டேய்.. அம்மா கிட்ட இருந்து குட்டிய புடுச்சுட்டு வந்து கட்டி போட்டு சோறு போட்டா pet lovers’அ?’ என்றான்

‘போன வெள்ளிக்கிழமை காலைல மாடில இருந்து பார்த்தேன், அந்த ஆளோட வைப் வாசல் தெளிக்க முன்னாடி கேட் திறந்து வந்துது. வரும் போதே சத்தம், இது எல்லா யாரு வளிக்கறதுனு கத்திகிட்டே வந்துது. வாசல் தெளிச்சதும் அதோட பொண்ணுகிட்ட இன்னு தண்ணி எடுத்துட்டு வா கருமத்த கழுவனுனுச்சு. அந்த பொண்ணுக்கு அந்த குட்டி நாய் பார்த்த பயம் போல. அது பாவம் சந்தோசமா குதிக்குது. அதுக்குள்ள அடுத்த வீட்டம்மா பொண்ணு கைல இருந்து தண்ணிய புடிகிட்டு வந்து இது எல்லா சரி பட்டு வராதுன்னே. பேசமா துரத்தி விற்றுனுசு. பாரேன் இவங்களுக்கு வேணும்னா அது அம்மா கிட்ட பால் குடுசுகிட்டு இருந்தத புடிங்கிட்டு வந்துடறது இப்போ வேண்டானா தூக்கி ஏறியுறது. இதுக குழைந்த அசிங்கம்பன்னா இப்டி தான் தூக்கி எறிவாங்களோ? இதுகெல்லா ஊர்ல எல்லோரும் 
பெத்துகுக்ககாராங்களேனு புள்ளைய பெத்து வழக்கறதுங்க.’ என்றேன்.

நாயோ பூனையா ஒரு தாயின் ஏக்கம், குட்டிகளின் மன நிலை புரியாதவர்கள் பெரும் பேரு வேறு என்னவாக இருக்க முடியும் என்றே தோணியது.

‘இந்த நாய் எதுக்கு வந்துது நாம எதுக்கு வந்தோம்னு ஒன்னு புரியல இதுல ஆபீஸ்ல அது இல்ல இது புரியலைன்னு வேற. எதுக்கு நட்பு இப்போ இங்கே வந்திருகோம்’ என்று பிரபஞ்ச ரகசியத்தை ஒரு வரியில் கேட்டு முடித்தான்.

இக்ரிச்டோபர் நோலன் படம் புரியாவிட்டால் என்ன, நாம் இங்கு இந்த புவியில் வந்தது எதற்கு, எதை நோக்கி நம் பயணம், இறப்பு நம் பயணத்தின் முடிவா இல்லை அது அடுத்த நிலைக்கானா ஆரம்பமா? இங்கு வருவதற்கு முன் தண்ணீர் நிறைந்த பெரும் குவளையில் நீந்தி வளர்ந்தோம். தொப்புள் கொடியில் உணவு உண்டோம், ருசியா கண்டோம், கண்டது மை இருட்டு, கேட்டிருந்த ஒரே சத்தம் இதையத்துடிப்பு. ஈரைந்து மாதத்தில் அடுத்த நிலை.

படி ஏறி இரண்டாவது மாடியில் இருக்கும் என் அறை வருவதற்குள் கருவரைமுதல் கல்லறை வரை சென்று வந்தேன். காரணங்கள் விளங்கவில்லை.

படம் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிய வைக்கும் ஆர்வத்தில் இருந்தேன், வெளியில் பூனைகளின் சண்டையிடும் சத்தம். அவசரமாக புகைப்பட கருவியோடு ஓடினேன். நான் இருக்கும் அறைக்கு பின்னால் ஒரு பூனை இரு குட்டிகளை ஈன்றிருந்தது. சில நாட்கள் அது விளையாட்டை, பால் அருந்துவதை புகைப்படமாக பதிவு செய்திருக்கிறேன். அந்த தாயுடன் அது அறியா வண்ணம் உணவு பகிர்ந்திருக்கிறேன்.

நான் எதிர் பார்த்து ஓடியது வேறு ஒரு பூனை நான் ஊற்றிய பாலை குடிக்க வந்திருக்க சண்டை துவங்கியிருக்கும் என்று. ஆனால் அங்கு வேறொரு பூனை இந்தத் தாயின் குட்டியை தூக்கிக் கொண்டு ஓடியது. துரத்தி சென்று பாதியில் முடியாமல் அடுத்த வீட்டு கிணற்றின் மேல் படுத்து தன்னை ஆசுவாசப்படித்திக் கொண்டிருந்தது. நான் அந்த குட்டிகள் இருக்கும் இடத்தை பார்த்தேன். எச்சங்கள் இருந்தது, குட்டிகள் பயத்தில் கழித்திருக்கலாம்.

வேகமாக அறைக்கு ஓடினேன், கணினியில் பூனை மற்றொரு பூனையின் குட்டியை தின்னுமா? என தேடினேன். பெண் பூனைகள் மற்றும் ஆண் பூனைகள் தின்னும் எனவும் அதற்க்கு பல காரணங்களும் கூறப்பட்டிருந்தது.

பெண் பூனைகள் தங்களின் குட்டி ஊனமாக இருந்தாலும். மற்ற குட்டிகளுக்கு பாலுட்ட ஏதும் இல்லாத போதும் ஒரு குட்டியை தின்னுமாம். ஆண் பூனைகள் தன் கூட்டத்தில் இருக்கும் பெண் பூனைகள் வேறு ஆணோடு கலவை கொண்டு பெரும் குட்டிகளை கொல்லுமாம். ஒரு கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட ஆண் தேடி வந்து குட்டிகளை கொல்லும். கலவையின் போது இடையுறாக இருந்தால், பல ஆண் குட்டிகள் இருந்தால் தன் நிலைக்கு ஆபத்து என்பதால், விளையாட்டின் போது சில நேரம் இரையை போல் நினைத்து கடித்துவிடுமாம் என பல கரணங்கள்.

மீண்டும் வெளிய போய் பார்த்தேன். இப்போது குட்டிகளோடு விளையாடிய இடத்தில அந்த பூனை தனியே வந்து படுத்திருந்தது. முன்னர் எல்லாம் நான் அந்த இடத்தை கடக்கும் போது ஒரு சீற்றம் இருக்கும், இப்போது ஒரு சலனமும் இல்லை அதனிடம். மீதி இருந்த பாலை அதற்க்கு ஊற்றினேன். வேறு என்ன செய்ய எடுத்த படங்களையா தரமுடியும் ஞாபகத்திற்க்கு.

என்ன காரணம் இருக்கும் இந்த தாயின் தனிமைக்கு? எதுவாயினும் அதுவும் ஒரு இயற்கையின் கோற்பாடாகவே இருக்கும் வேறு என்ன இருக்க முடியும். கோட்படுகள் அறியப்படாத வரை பரிதாபம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.


அந்த தாய் மெல்ல கத்திக்கொண்டிருந்தது, அந்த ‘மியோவ்’ இப்போது வேறு மாறி கேட்டது.

Saturday, March 7, 2015

கடன்காரர்கள்!!!

ம்மளும் ஹோம் லோன் போற்றுக்கணும்” என்றார் துனை மேலாளர் (அசிஸ்டென்ட் மேனேஜர்).

ஒன்றும் புரியாவதவனாய் “எதுக்கு, நீங்க இருக்கறது சொந்த வீடு இல்லையா?”

“அதுக்கில்ல இந்த மாசம் டாக்ஸ் செமைய புடுச்சிருக்கானுங்க”

இடை மறைத்த இன்னொருவர், “எவ்ளோ ஜி புடுச்சாங்க?”

“அம்பதாயிரம் டா” என்றார்.

இந்த மாதம் ஊக்கப் பங்கும் (போனஸ்) மாத வருவாயோடு சேர்ந்திருந்தது எனவே வரி சற்று அதிகமாவே இருந்தது. இங்கு கடன் பெறுபவர்கள் பாதிக்கும் மேல் வரி கட்டுவதை தவிர்க்கவே பெறுகின்றனர்.

இப்படி ஆண்டுக்கு 50,000 எனில், மாதம் நாங்காயிரம். 50,000 வரி மட்டும் எனில் மொத்த வரவு எவ்வுளவு இருக்கும். இதில் மாதம் நாங்காயிரம் வரி தவிர்க்க கடன் வாங்கி இவர்கள் கட்டும் தொகை ஆண்டு வருமானத்தில் பாதியை விழுங்கி விடும்.

எந்த ஒரு வீட்டுக் கடனானதும் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்துவதாக இருந்தால் இழப்பின்றி வீடு வாங்கியாதாக கொள்ள முடியும். இருபது, முப்பது ஆண்டுகாலம் அடைக்கப்படும் கடன்கள் யாவும் ஏமாற்று வேலைகள்.

தோராயமாக 25 ஆண்டுகாலதிற்கு 25,00,000/- வீட்டுக் கடன் பெறுபவர் மொத்தம் கட்டும் தொகை இருமடங்கை தொடும், அதாவது 40,00,000/- முதல் 50,00,000/- வரை. வட்டி சதவீதம் எதுவாயினும் இதுவே நிலை. இதற்க்கு பல காரணங்கள்,

முதல் காரணம், முதலும் வட்டியும் சேர்த்தே மாதத் தவணை கட்டுவோம். அப்படி கட்ட கட்ட உங்கள் வட்டி குறைய வேண்டும். பெற்ற கடனில் சிறுக சிறுக முதல் அடைக்கப்பட்டு வரும், அடைக்கப்பட்ட முதலுக்கான வட்டி குறைய வேண்டும். ஆனால் பல வங்கிகள் முதல் தவணை முதல் இறுதி தவணை வரை வட்டியை குறைப்பது இல்லை.

அடுத்து, ரிசர்வ் வங்கியானது நிர்ணயிக்கும் சதவிகிதமே அனைத்து வங்கிகளும் ஏற்று நடக்க வேண்டும். எந்த வட்டியும் சதவிகதமும் எந்த நேரத்திலும் மாறலாம். இப்படி இருக்க வீட்டுக் கடன் வட்டி யாவும் மாறும். ஏறினால் உங்கள் தவணை நீடிக்கப்படும் (25 வருடமாக இருந்தது  27, 30 என ஆகலாம்) அது கடனாளிகளுக்கு தெரிய படுத்த அவசியம் இல்லை. அதே குறையும் போது வங்கி அதை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. கடனாளிகளே அதனை ஏற்க மனு அளிக்க வேண்டும் அதற்க்கு தனியாக கட்டணம் உண்டு (4000 6000 இப்படி).


வரியை ஏய்க்க கடன் என்பது சரியான தீர்வு அல்ல. அதற்க்கு பல வழிகள் உண்டு ஆனால் வரி என்பது நாம் நமக்காக சேர்க்கும் பணம். ஆயிரம் கோடி லட்சம் கோடிகள் ஊழல் பெர்வளிகளால் போகிறது என காரணம், காரணம் மட்டும் சொல்வது சரி ஆகாது. பானை ஓட்டை என்றால் அதனை அடைக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டும். ஓட்டை பானையில் நீர் விடுவது எப்பேர்பட்ட முட்டாள்தனமோ அதே போல் வெறும் காரணம் மட்டும் சொல்வது.

Thursday, January 15, 2015

மிருக வதை!

து வதை
உண்ண உட்காரும்போது
தள்ளி விடுவதும் வதையே..
நாம் குடிக்கும்
பாலும், தயிரும்..
கண்ணனவன் உண்ணும்
வெண்ணையும் மிருக வதையே!
 தன் கன்றுக்கு சுரக்கும் பாலை
திருடும் கள்ளர்கள் தானே நாம்..
நமக்கு கடவுளுக்கு
பின் காசுக்கும் விற்கும் நமக்கு
என்ன வதை பற்றி பேச வக்கு??
தன் மனம் போல் இல்லாது
அடக்கி தானே இங்கு உளவுக்கே பழக்கினோம்..
அப்படி பார்க்கையில் விவசாயமும் வதையல்லவோ?
தவறுகளை களைவது தானே முறை
பேருந்தில் கற்பழிக்கப்பட்டால்
பேருந்து ஓட்டத்தையே நிறுத்துதல் நியாயமாகுமோ?
முறை செய்வோம்... தழுவுதல் தொடர்வோம்!