Friday, November 25, 2011

பகு கூட்டல் அறிதல்



என் ஆண்டவனுக்கு இன்னமும் அஞ்ஞாதவாசம்,
அதனால் தான் அவனுக்கு இன்று இத்துணை வேசம்!
யாரெவர் எப்பெயரில் வேண்டினாலும்,
தருவதும் வருவதும் அவன்
அவனிடத்தில் இருந்து தான்!
வனால் பிரிவினையாம்,
அவனால் மதமாம்,
மதத்தால் ஜாதியம்,
ஜாதியால் ஏற்றத்தாழ்வாம்,
இவையால் வெறியாம்,
வெறியால் உயிர் பலியாம்!
இத்துணைக்கும் காரணம் அவன் என அவன் மேல் பழி யாம்,
அவன் இல்லை என்று சொன்னால் பலி நின்றுடுமாம்!
பெரிய பகுத்தறிவாளிகளின் பலர்  முறையே சொல்லும் கதை இது.
தண்ணீரும், இந்த தமிழ்லும் பிரச்சினைகள் கொண்டுவந்திடுதலால்
தள்ளி வைப்பது என்ன முறை!!?
ஜாதகம் ஜோசியம் பஞ்சாங்கம் எல்லாம்
பழைய கிழவியின் அர்த்தமற்ற திண்ணை படைப்பாம்,
இது தான் இந்த கருப்பின் கூற்று!
நீண்ட பாதை செல்ல
வழி நெடுகிலும் பலகைகள் பல உண்டு
விபத்துகள் நேரிடும் பகுதி என எச்சரிக்கை அதில் கண்டு
திரும்பிப் போகும் அறிஞரிடத்தும்,
காணாது போகும் பகுத்தறிவாளரிடதும்
உள்ளது என்பேன் மூட நம்பிக்கை!
இவர்கள் யாவரும் பேசுவது எது வரை,
வெளியே பிச்சையிட்டு
உள்ளே உன்னிடத்தில் பிச்சை கேட்ப்போரின் உரை வரை!
தூது சொல்ல வந்தவர்கள்
நாடாள்வது என்ன முறை..?
நீயே கேட்பாய் இவர் குறை.
எத்தனையோ தோஷக்காலங்கள் உனக்கு உண்டு
அதில் கடந்து போகும் பகுக்க தெரிய கருப்பு துண்டு!
எத்தனையோ பெயரில் உன்னை தொளுததுண்டு,
இது உன்னை இல்லை என்று சொல்லும் மதம்,
இந்நாட்டு அரசியலுக்கு துணையாய் நீயும்
தமிழும் உண்டு!

--சித்ரன்


3 comments:

  1. எனக்குத் தெரிந்த பிரதீப்சித்திரன் ஒரு நாத்திகவாதியாயிற்றே !! முடிவில் "நீயும்" என்று குறிப்பிட்டிருப்பது யாரைப் பற்றியோ !! இதுவும் அவன் திருவிளையாடல்களில் ஒன்றோ !! இறைவனுக்கே வெளிச்சம்...

    ReplyDelete
  2. ஒரு வேளை நீயும் கருணாநிதியைப் போன்ற அரசியல் நாத்திகவாதியோ!

    ReplyDelete
  3. ஐயோ அம்மா!!! இதை வீட என்னை என் வாழ் நாளில் இப்படி ஒரு வார்த்தையில் வைத்ததில்லை யாவரும். நானும் யாரிடத்தும் கேட்காதது உங்களிடம் கேட்கிரேன் 'தயவு கூர்ந்து அந்த கருத்தை திரும்பப் பெறுங்கள்'. இதற்கு பதில் உலக மொழிகள் எதில் என்ன வார்த்தை தேடியும் என்னை வைதுகொள்ளுங்கள்.

    ReplyDelete