நானும் நீயும் நிரந்தரமோ..?
நானே போனபின் நீயிருன்தென்ன அவனிருந்துஎன்ன,
பரமனவன் இருந்தும் என்னக்கென்ன.
யாரோ சொல்லக் கேட்ட நிரந்தரம் என்ற வார்த்தை –
நிரந்தரம் என்பதில் நிதர்சனம் ஏதும் இல்லை.
மாறி மாறி போன மொழியை பற்றி –
வேள்வி நடத்தி,
மக்களை போட்டு எரித்து அரசியலும் செய்வர்,
எம் மொழி நிரந்தரமோ..?
மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டால் நிரந்தரமென்றாககுமோ,
மாறிப்போனால் நிரந்தரமெங்கே ஆவது.
எதுவோ நிரந்தரம்..?
உணர்ச்சிகளேனும் நிரந்திரமோ..?
இச்சைகளேனும் நிரந்திரமோ..?
நிரந்திரமாயின் பலர் பரத்தையர் சேரியிலேயே குடிகொண்டிருப்பர்,
மாறி மாறி மாற்றங்கள் கண்டு மக்கும் –
பூத உடலே நிரந்திரமற்று இருக்கும் போது –
அது மேல் கொள்ளும் இச்சை நிரந்தரமென்றாககுமோ..?
காதல் நிரந்தரமோ..?
கல்யாணத்திற்கு பிறகு பிறர்பால் வருவது –
கள்ளக்காதல் எனில்,
யாரையோ காதலித்து விட்டு யாரையோ கை பிடிப்பது –
கள்ளக்கல்யானம் ஆகாதோ..?
இப்படி கள்ளம் இருப்பது நிரந்திரமாகுமோ..?
கள்ளமேனும் நிரந்திரமோ..?
பழகியதை மாற்ற முடியுமோ,
மனம் போனதையாவது சொல்ல முடியுமோ..?
இந்த பாசமேனும் நிரந்திரமோ..?
பிறகு எதற்கு இத்துனை குழந்தைகள் அநாதை என்ற மதத்தில்..?
பற்றின்றி வாழ்வது வாழ்வு என்றவன் புத்தனவன்,
யாரும் பற்றோடு இராதீர் என்ற –
பற்றை மறந்தும் விடாமல் பற்றி
இருந்தவன்,
அவன் பற்று நிரந்தரமோ..?
இதோ என் தேடல் –
என் நாள் முடியும் வரை விடை காணாது இருந்தால்,
அதுவரை என் தேடல் நிரந்தம்!
--சித்ரன்
No comments:
Post a Comment