நான் எழுதுகையில் – மற்றொரு
கையில் ஏந்திக்கொள்ள சிணுங்கும் ஒருத்தி!
கையில் ஏந்திக்கொள்ள சிணுங்கும் ஒருத்தி!
வேலைக்கு கிளம்பும் அவசரத்தில்,
முத்தம் தந்து மறையும் முகம் அவளுடையது!
என் முத்தத்தை எச்சை என துடைத்துக் கொண்டே,
இன்னொன்று எதிர் பார்க்கும் – அணைக்கும்
பார்வை அவளுடையது!
பார்வை அவளுடையது!
நடை பழகுபவள் போல் – எப்போதும்
என் கரம் பற்றி நடக்கும் – என்னை
வீழ்ந்துவிடாது காக்கும் கரம் அவளுடையது!
என் கரம் பற்றி நடக்கும் – என்னை
வீழ்ந்துவிடாது காக்கும் கரம் அவளுடையது!
ஆண் பெண் பேதம் அறிந்தது முதல்-
நான் உணர்ந்த முதல் வாசம் அவளுடையது!
என் இதழை நினைத்த மறு இதழ் அவளுடையது!
என் மேல் புரண்ட – நான்
புரட்டி கற்றறிந்த புத்தகம் அவள் தேகம்!
புரட்டி கற்றறிந்த புத்தகம் அவள் தேகம்!
எனக்காக கண்ணீரும் சுரந்து ,
என்னை தடுமாறியும் விழ செய்யும் சிறு கண்கள் அவளுடையது!
என் கைகள் கசக்க பூ சுடும் கூந்தல் அவளுடையது!
என் மகிழ்ச்சியாய் வந்த அவள் - என்றும்
எனக்கான எனக்கென ஒருத்தி!
எனக்கான எனக்கென ஒருத்தி!
No comments:
Post a Comment