இன்று மற்றும் ஒரு நாள் தான்,
உதித்த இடம் மாறாமல் உதித்து
மறையும் இடத்தையும் மாற்றாது!
அதே இருபத்தி நான்கு மணி நேரம் தான்,
மணிக்கு அறுபது நிமிடம் மட்டுமே,
மாற்றம் இல்லை!
எல்லா நாளும் இப்படி இருந்த போதும்
ஏதோ ஒரு நாள் –
எல்லோருக்கும் நினைவில் நின்றுக்கொண்டிருக்கும்,
நாம் பிறந்த நாள் என்று,
நமக்கு பிடித்தது நம் கைக்கு வந்த நாள் என்று,
நம் வாழ்வை மாற்றியவரை சந்தித்த நாள் என்று,
முதல் சம்பளம் வாங்கிய நாள் என்று,
முதல் முத்தம் தந்து பெற்ற நாள் என்று,
கனவு இல்லம் கைக்கு வந்த நாள் என்று,
கல்யாண நாள் என்று,
மகப்பேறு நாள் என்று,
மனம் மாறி பிரிந்த நாள் என்ற,
எதோ ஒன்று நடந்து அந்த நாள் நம் மனதோடு ஒட்டி இருக்கும்
இன்று நமக்கு பிடித்த ஒன்றை செய்து
இந்த தேதியை நம் மனதோடு ஒட்டி இருக்கச்செய்வோம்!
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!!
No comments:
Post a Comment