Thursday, March 29, 2012

என்னோடு என்னைக்கொல்லும் துரோகி



கண்கள் விழிக்கவே வெறுப்பாக இருந்தது. இருத்தும் விழித்து விட்டத்தை பார்த்தவாறே படுத்திருந்தான். கண்கள் கலங்கின. வெறுப்போடு அதை துடைத்து எறிந்தான். முகம் முழுக்க வெறுப்பு தொற்றிக்கொண்டு இருந்தது.

அப்போது தான் வந்தான் உள்ளே அவன். இன்னும் அதிக நிசப்தம் அந்த அறையில் நிலவியது. வந்தவன் முகத்தை பார்க்கக் கூட விரும்பாதவனாய் மறு புறம் திருப்பிக் கொண்டான்.

சில நிமிடங்கள் நிசப்தத்தோடே நகர்ந்தது. இன்னும் வெறுப்பு ஏறி முகம் சிவக்க அவனை பார்த்து கத்தினான்..

எங்க டா வந்தே?? உன்ன எல்லா.. இச்ச. பாரு இப்போ தினமும் என் முஞ்சி மாறுது. முன்னாடி எல்லாம் சொல்லுவியே கண்ணாடியே பார்த்து தல சீவிவிட்டு வான்னு. அப்போ எல்லாம் அதை பார்த்ததே இல்ல. ஆனா இப்போ தினம் தினம் .. ஒரு நாளிக்கே பல தடவ பார்க்கறே.. அப்டியே தா..

சொல்லி முடிக்கும் முன்னரே குரல் தழுதழுத்தது. கொஞ்சம் ஆசுவாசம் படுத்திக்கொண்டு மூக்கை துடைத்துக் கொண்டு தொடர்ந்தான்

அப்டியே தான் இருகேனானு... தலைய கோதின கையில அவ்ளோ முடி சின்ன புன்னகைக்கு பின் தொடந்தான் இந்த இதுக்கு எத்தன கடை ஏறி.. எந்த எந்த சலூன்.. கிரீன் இட்டிரேன்ஸ்...இச்ச...

தலையில் அடித்துக் கொண்டு தொடர்ந்தான்.. கண்கள் கலங்கிய படி..

வாயால சாப்பிட்டு எத்தன நாள் ஆச்சு தெரியுமா? காலைல சரியா பாத் ரூம் கூட போக முடியல.

இடைமறிக்க முயன்றவனை பார்த்து, கண்களை வேகமாக துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்த்து

டேய் பேசாத சாவடுச்சுடுவேன்

 கைகள் உதற ஆரம்பித்தன, மேல் மூச்சு வாங்கியது. மீண்டும் மீண்டும் கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே இருந்தான். வந்தவனுக்கு ஏது சொல்வது என்று தெரியாமல், வெளியே போகவும் தோணாமல் பேச்சு வாங்கியப்படி நின்றிருந்தான்.

எங்கே வலிக்குதுனே தெரியாது. ரொம்ப நேரம் தூங்கினா எங்கே செத்து போய்டேனோனு தூக்கத்திலயே பயமா இருக்கு. சொல்லிக்கொண்டே வெறுப்போடு அவனை ஒரு பார்வை பார்த்தான். வந்தவனுக்கு கைகள் விறைத்து போய்விட்டிருந்தது. வந்தவன் முகத்தை பார்க்க பார்க்க இவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. கத்ததத் துவங்கினான்.

எப்டி டா உனக்கு எல்லா ஒன்னும் ஆகல.. நல்லா இருக்க.. ஏன்டா இப்டி எல்லாரையும் சாகடிக்கறீங்க. தூ.. இதே மாதிரி எத்தன பேரை சாகடிச்சிருப்ப.. உன்ன மாறி ஆளுங்கள கொன்னா என்ன?”

சத்தம் கதவுகளை தாண்ட, வெளிய அமர்ந்து இருந்த செவிலி உள்ளே ஓடி வந்து அவனை அமைதியாக்கினாள். வந்தவனை அந்த அறையை விட்டு வெளியே கூட்டிச் சென்றாள்.

நீங்க தான் அவர் ரூம்மெட்டா?”

ம்ம்

சிகரெட் பழக்கம் இருக்கா?”

ஆமா, ஆன..

அவர் சும்மா செக் அப் வந்தப்ப டாக்டர் அவருக்கு பழக்கம் இல்லை அப்டிங்கரத நம்பவே இல்ல. போக போக தான் தெருஞ்சது பெசிவ் ஸ்மொகர் அப்டினு. மத்த புகை எல்லாம் ஒரு பக்கம்ன.. இது வேற மாதிரி சார். நீங்க இழுத்து வெளியே விட்டுருவீங்க ஆனா பெசிவ் ஸ்மொகர்ஸ் அத உள்ள இழுகரதொட சரி வெளிய வராது. புரியுதுங்களா?”

மேற்கொண்டு அவனால் ஒன்றும் கேட்க முடியவில்லை. முகத்தை மறைத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வேகமாக வெளியே நடந்தான். வழியில் யாரோ ஒருவர் புகைதுக்கொண்டு இருக்க அருகில் நின்றிருந்த கர்பஸ்திரியையும் ஒரு நொடி நின்று பார்த்து நடந்தான்.

No comments:

Post a Comment