Saturday, July 21, 2012

எதையும் நம்பிடேன்


வனே இல்லை எனில் என் தமிழ் வளர்ந்தது எவ்வண்ணம்
அவனை பரிகாசம் செய்யின்.,
திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் ஏற்றிய பாடல் கூற்று என்ன?
திருமூலர் சொன்னா திருமந்திரம் பொய்யென கொள்வேனோ?
இவன் பேச்சில் பெரிய புராணம் புதைந்துவிடின் என் தமிழ் என்னவாவது?
இன்னமும் கரம் பிடித்து தடுமாறி நடக்கும் – அறுவியல்
சொல்லும் நாள் வரை அவனை எண்ணாது இருக்குமோ என் மனம்
எல்லாம் அவன் என்றும்
அவன் என்னுள்ளும் என்ற பின்
இன்னும் தெருவில் தேடுவேனோ?
ஆனால் கையில் விதை இருக்க நிழல் கிட்டிடுமோ?
எடுத்து எரிந்து விட்டால் வளர்திடுமோ?
மூலவர் அவர் மந்திரமும்  இதுவன்றோ
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.
எம் பசுவும் பால் சொரியும்
வெறி ஐந்தும் அடக்கிட முடியும்
என்னை நான் மேய்ப்பேன்!
என்னை என்னுள் கண்ட பிறகு தெரியும் அவன் யார் என்பது
அதுவரை நம்பிடேன் யவர் கூற்றும்!
சொல்லும் சொல் வண்ணமே கேட்கையில் சிலிர்த்திடும் என் மனமே
நம்பிடாதே நம்பி நின்றிடாதே
கேட்கையில் கிட்டிடும் சிலிர்ப்பை காட்டிலும் பெரியது காண்போம்
மெய்யாய் நாம் உணரும் போது!
அதனால் நம்பிடேன் யவர் கூற்றும்!





--சித்ரன்

Saturday, June 23, 2012

குரு

யாதுமானவன்
யாதும் அவன்
என்னுள் எனதை தேடிக்கொள்ள
கற்றுத்தருபவன் - அவன்
எல்லாம் என்னவென்ற கேள்விக்கும்
எல்லாவற்றிலும் நான் யார் என்ற கேள்விக்கும் 
விடை தேட வழி சொல்பவன்  அவன்
மூன்றில் என்னை முதன்மை படுத்தி
உணர்ந்திட உதவுபவன்  அவன்
கட்டுண்டு கிடப்பவன் அன்றே அவன்
கட்டுண்டு இருப்பின் என் கட்டை அவிழ்ப்பது எவ்வாறோ?
சுதந்திரமானவன்
சூத்திரங்கள் உமிழ்பவன்
கர்மம் அறுத்தவன்
தர்மம் அறிந்தவன்  அவன்
கோடியில் ஒருவன் அல்ல என் குரு
கோடிக்கணக்கானோர் என் குரு.




Saturday, June 16, 2012

என் ஜீவன் நீ!

நெருப்பென நான் இருப்பின்
காற்றென நீ வருவாய்
உன்னை உண்டு நான் ஜீவிப்பேன்
என் ஜீவனில் நீ மீண்டும் பிறப்பாய்
என் ஜீவன் அன்றோ நீ!



Friday, May 4, 2012

உன்னோடு நான்!!!

ன் அலாதி அன்பில் நினைந்து
நானும் ஒரு துளி என்று ஆனேன்
உன் மழையில் இன்னும் எத்துனையோ உறவுகள்
தாய் என்று தந்தை என்று
தமக்கை என்று தமையன் என்று
ஒவ்வொரு துளியும் நம் உறவின் தூரம் அதிகரிக்க காரணம்
நீ ஆதரிக்காத துளி என்று நம் உறவு இன்று
யாரும் கேட்காத சந்தம்
உறவில்லா உறவோடு நான் கொண்ட பந்தம்!
உன்னோடு நகரும் என் நாளுக்கு தெரியாது 
நீ என்னோடு இல்லை என்று!
நீ இல்லாமல் உன்னோடு நான்!!!








Monday, April 16, 2012

இராவணன் என வருவேன்

நீயின்றி வாழ்வது இவ்வளவு கடினம் என்று உணர்ந்திருந்தால்
அன்றே இராவணனாய் உன்னை கடத்தி கொண்டுவந்திருப்பேன்...
மிகவும் நல்லவனாய் உன்னை போ என்று சொல்லிவிட்டு
இன்று உன்னை நினைத்து
உன்னையே சாடுகிறேன்!
இன்னும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே
முதல் முறை பயத்தில்
காதல் சொல்வதற்கு முன்பே கடத்தி கொண்டுபோய்விடுவேன்!
என் சூரியன் மறையும் வழி
நீ கிழித்த உச்சந்தலை வகுடு வழி
உன் மூக்கின் நுனியில் வியர்வை வடியும் தருணம்
என் உயிர் விட்டு விலகுமடி
காது மடல் எல்லாம் தொட்டு சிலிர்க்கும் நேரம்
என் வாழ்நாள் சாபம் விலகுமடி
கண்கள் சாய
கைகள் இரண்டும் தலைக்கு வைத்து உறங்க முற்படும் நேரம்
நீ என் மார்மோடு அணைத்து
அதில் தலை வைத்து உறங்கும் உஷ்ணம் தரும் உறக்கம்
மரணனித்து இறப்பை வென்று வரும் என் கர்மம!
விடியும் பொழுது எல்லாம் பொய்யென்று உணரும் நேரம்
மீண்டும் ராவனண்ணாக துடிக்கிறேன்!




Thursday, March 29, 2012

என்னோடு என்னைக்கொல்லும் துரோகி



கண்கள் விழிக்கவே வெறுப்பாக இருந்தது. இருத்தும் விழித்து விட்டத்தை பார்த்தவாறே படுத்திருந்தான். கண்கள் கலங்கின. வெறுப்போடு அதை துடைத்து எறிந்தான். முகம் முழுக்க வெறுப்பு தொற்றிக்கொண்டு இருந்தது.

அப்போது தான் வந்தான் உள்ளே அவன். இன்னும் அதிக நிசப்தம் அந்த அறையில் நிலவியது. வந்தவன் முகத்தை பார்க்கக் கூட விரும்பாதவனாய் மறு புறம் திருப்பிக் கொண்டான்.

சில நிமிடங்கள் நிசப்தத்தோடே நகர்ந்தது. இன்னும் வெறுப்பு ஏறி முகம் சிவக்க அவனை பார்த்து கத்தினான்..

எங்க டா வந்தே?? உன்ன எல்லா.. இச்ச. பாரு இப்போ தினமும் என் முஞ்சி மாறுது. முன்னாடி எல்லாம் சொல்லுவியே கண்ணாடியே பார்த்து தல சீவிவிட்டு வான்னு. அப்போ எல்லாம் அதை பார்த்ததே இல்ல. ஆனா இப்போ தினம் தினம் .. ஒரு நாளிக்கே பல தடவ பார்க்கறே.. அப்டியே தா..

சொல்லி முடிக்கும் முன்னரே குரல் தழுதழுத்தது. கொஞ்சம் ஆசுவாசம் படுத்திக்கொண்டு மூக்கை துடைத்துக் கொண்டு தொடர்ந்தான்

அப்டியே தான் இருகேனானு... தலைய கோதின கையில அவ்ளோ முடி சின்ன புன்னகைக்கு பின் தொடந்தான் இந்த இதுக்கு எத்தன கடை ஏறி.. எந்த எந்த சலூன்.. கிரீன் இட்டிரேன்ஸ்...இச்ச...

தலையில் அடித்துக் கொண்டு தொடர்ந்தான்.. கண்கள் கலங்கிய படி..

வாயால சாப்பிட்டு எத்தன நாள் ஆச்சு தெரியுமா? காலைல சரியா பாத் ரூம் கூட போக முடியல.

இடைமறிக்க முயன்றவனை பார்த்து, கண்களை வேகமாக துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்த்து

டேய் பேசாத சாவடுச்சுடுவேன்

 கைகள் உதற ஆரம்பித்தன, மேல் மூச்சு வாங்கியது. மீண்டும் மீண்டும் கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே இருந்தான். வந்தவனுக்கு ஏது சொல்வது என்று தெரியாமல், வெளியே போகவும் தோணாமல் பேச்சு வாங்கியப்படி நின்றிருந்தான்.

எங்கே வலிக்குதுனே தெரியாது. ரொம்ப நேரம் தூங்கினா எங்கே செத்து போய்டேனோனு தூக்கத்திலயே பயமா இருக்கு. சொல்லிக்கொண்டே வெறுப்போடு அவனை ஒரு பார்வை பார்த்தான். வந்தவனுக்கு கைகள் விறைத்து போய்விட்டிருந்தது. வந்தவன் முகத்தை பார்க்க பார்க்க இவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. கத்ததத் துவங்கினான்.

எப்டி டா உனக்கு எல்லா ஒன்னும் ஆகல.. நல்லா இருக்க.. ஏன்டா இப்டி எல்லாரையும் சாகடிக்கறீங்க. தூ.. இதே மாதிரி எத்தன பேரை சாகடிச்சிருப்ப.. உன்ன மாறி ஆளுங்கள கொன்னா என்ன?”

சத்தம் கதவுகளை தாண்ட, வெளிய அமர்ந்து இருந்த செவிலி உள்ளே ஓடி வந்து அவனை அமைதியாக்கினாள். வந்தவனை அந்த அறையை விட்டு வெளியே கூட்டிச் சென்றாள்.

நீங்க தான் அவர் ரூம்மெட்டா?”

ம்ம்

சிகரெட் பழக்கம் இருக்கா?”

ஆமா, ஆன..

அவர் சும்மா செக் அப் வந்தப்ப டாக்டர் அவருக்கு பழக்கம் இல்லை அப்டிங்கரத நம்பவே இல்ல. போக போக தான் தெருஞ்சது பெசிவ் ஸ்மொகர் அப்டினு. மத்த புகை எல்லாம் ஒரு பக்கம்ன.. இது வேற மாதிரி சார். நீங்க இழுத்து வெளியே விட்டுருவீங்க ஆனா பெசிவ் ஸ்மொகர்ஸ் அத உள்ள இழுகரதொட சரி வெளிய வராது. புரியுதுங்களா?”

மேற்கொண்டு அவனால் ஒன்றும் கேட்க முடியவில்லை. முகத்தை மறைத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வேகமாக வெளியே நடந்தான். வழியில் யாரோ ஒருவர் புகைதுக்கொண்டு இருக்க அருகில் நின்றிருந்த கர்பஸ்திரியையும் ஒரு நொடி நின்று பார்த்து நடந்தான்.

Thursday, March 22, 2012

நான் கேட்பதெல்லாம்

ங்களிடம் புது சட்டை கேட்கவில்லை
கிழிந்த என் சட்டையை தைக்க கற்றுக்கொடுங்கள் என கேட்டு நிற்கிறேன்
உங்கள் கரம் பிடித்து நடக்க வேண்டாம்
என் பாதையை விட்டு நீங்கள் விலகி நடத்தால் போதும் என்கிறேன்
உங்கள் அறிவுரைகளை நான் கேட்பதில்லை
என் அறிவு பசிக்கு தீனி கேட்கிறேன்
உங்களின் உபதேசம் தேவையில்லை
கலந்துரையாடி அறிவு பெற எண்ணுகிறேன்
தோள் கொடுத்து தூக்கிவிட வேண்டாம்
என் கால்களை இடராது இருங்கள்
நாங்கள் வளர்ந்து கொள்வோம்
எங்கள் எண்ணங்களை கொல்லாது இருந்தால் போதும்
உங்கள் ரசனைக்கு என்னை தீனியாக்காதீர்கள்
எனக்கென்று ரசனைகள் உண்டு, மதிப்பு கொடுங்கள் போதும்
உங்கள் கனவுகளுக்கு என்னை செயலாக்கம் செய்யாதீர்கள்
நீங்கள் இடறிய பாதையில் என் பயணத்தை தடுக்காதீர்கள்
தானாய் இடறி விழுந்தால் நானாய் எழ கற்றுக்கொள்வேன்

என்னை விட்டு விடுங்கள்!