Saturday, December 17, 2011

என் கண்ணில்...

ரே செய்தி ஒரு பக்கம் மரணம் தரும் ரணமும்,
மறுபக்கம் வாழ்நாள் ஆனந்தமும் தரும் எனில்
என் கண்கள் வழி வழியும் நீர்
ஆனந்த கண்ணீரோ அல்ல என்னை எரிக்கும் வெண்ணீரோ??
அது எதுவாயினும்
என்னை தலை குப்பற செய்யும் செய்தி
உன்னை பற்றியது என்பது மட்டும் புரிகிறது, என் வாழ்வே!
உனக்கு எதுவும் கேட்க வேண்டாம் எனவே
வாய் மூடி சிரித்தவாறே அழுகிறேன் நானே அறியாது!






Monday, December 12, 2011

உன் மனை புகா இனம்


டையறினம் அவன் கண்ணன் -
உன் மனை புகுவான் எனில்,
நான் இடையர் இனம் அல்ல.
காடு திரியும் சிவன்
அவன் இனமும் அல்ல.
இனம் கண்டு,
அவர் கொண்ட பணம் கண்டு
கணக்கு போட்டு அனுமதிக்கப்படும்
உன் மனை புகா இனம்!
இப்படி உள்ளவர் எவரையும் சகா எனவும்
காட்டிக்கொள்ளா இனம்!


தெரியல!

ன் கால் மேலே ஏறி நின்னுருக்கா,
முத்தொ கொடுத்தா,
அவ உதட்ட கடுச்சுறுக்கெ,
கட்டி புடுச்சிருக்கோ,
ஒன்னா  அழுதிருக்கோ,
ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிருக்கோம்,
என்னென்னமோ பேசிருக்கொ,
கைய புடுச்சுகிட்டு நடந்திருக்கொ,
இப்போ, ஒன்னு இல்ல,
எதுவும் வேண்டான்னு சொன்னா..?
செத்து கீழ விழுந்திட்ட மாதிரி இருந்தது,
என்னமோ..
அவ எப்பவு என் கூடதா இருப்பானு இருந்தது
அவ அப்படிதா நினைக்க வெச்சா..
ஆனா நா எதோ விட்டுட்டேன் போல,
அவளுக்கு ஏனோ நம்பிக்கை இருந்தது
எப்படியும் அவ போனப்புறம்
வேற ஒருத்தியோட என் வாழ்க்கை நல்ல இருக்கும்னு!
தெரியல!




Friday, November 25, 2011

பகு கூட்டல் அறிதல்



என் ஆண்டவனுக்கு இன்னமும் அஞ்ஞாதவாசம்,
அதனால் தான் அவனுக்கு இன்று இத்துணை வேசம்!
யாரெவர் எப்பெயரில் வேண்டினாலும்,
தருவதும் வருவதும் அவன்
அவனிடத்தில் இருந்து தான்!
வனால் பிரிவினையாம்,
அவனால் மதமாம்,
மதத்தால் ஜாதியம்,
ஜாதியால் ஏற்றத்தாழ்வாம்,
இவையால் வெறியாம்,
வெறியால் உயிர் பலியாம்!
இத்துணைக்கும் காரணம் அவன் என அவன் மேல் பழி யாம்,
அவன் இல்லை என்று சொன்னால் பலி நின்றுடுமாம்!
பெரிய பகுத்தறிவாளிகளின் பலர்  முறையே சொல்லும் கதை இது.
தண்ணீரும், இந்த தமிழ்லும் பிரச்சினைகள் கொண்டுவந்திடுதலால்
தள்ளி வைப்பது என்ன முறை!!?
ஜாதகம் ஜோசியம் பஞ்சாங்கம் எல்லாம்
பழைய கிழவியின் அர்த்தமற்ற திண்ணை படைப்பாம்,
இது தான் இந்த கருப்பின் கூற்று!
நீண்ட பாதை செல்ல
வழி நெடுகிலும் பலகைகள் பல உண்டு
விபத்துகள் நேரிடும் பகுதி என எச்சரிக்கை அதில் கண்டு
திரும்பிப் போகும் அறிஞரிடத்தும்,
காணாது போகும் பகுத்தறிவாளரிடதும்
உள்ளது என்பேன் மூட நம்பிக்கை!
இவர்கள் யாவரும் பேசுவது எது வரை,
வெளியே பிச்சையிட்டு
உள்ளே உன்னிடத்தில் பிச்சை கேட்ப்போரின் உரை வரை!
தூது சொல்ல வந்தவர்கள்
நாடாள்வது என்ன முறை..?
நீயே கேட்பாய் இவர் குறை.
எத்தனையோ தோஷக்காலங்கள் உனக்கு உண்டு
அதில் கடந்து போகும் பகுக்க தெரிய கருப்பு துண்டு!
எத்தனையோ பெயரில் உன்னை தொளுததுண்டு,
இது உன்னை இல்லை என்று சொல்லும் மதம்,
இந்நாட்டு அரசியலுக்கு துணையாய் நீயும்
தமிழும் உண்டு!

--சித்ரன்


Tuesday, November 22, 2011

எனக்கென ஒருத்தி..

நான் எழுதுகையில் – மற்றொரு
கையில் ஏந்திக்கொள்ள சிணுங்கும் ஒருத்தி!
வேலைக்கு கிளம்பும் அவசரத்தில்,
முத்தம் தந்து மறையும் முகம் அவளுடையது!
என் முத்தத்தை எச்சை என துடைத்துக் கொண்டே,
இன்னொன்று எதிர் பார்க்கும் – அணைக்கும்
பார்வை அவளுடையது!
நடை பழகுபவள் போல் – எப்போதும்
என் கரம் பற்றி நடக்கும் – என்னை
வீழ்ந்துவிடாது காக்கும் கரம் அவளுடையது!
ஆண் பெண் பேதம் அறிந்தது முதல்-
நான் உணர்ந்த முதல் வாசம் அவளுடையது!
என் இதழை நினைத்த மறு இதழ் அவளுடையது!
என் மேல் புரண்ட – நான்
புரட்டி கற்றறிந்த புத்தகம் அவள் தேகம்!
எனக்காக கண்ணீரும் சுரந்து ,
என்னை தடுமாறியும் விழ செய்யும் சிறு கண்கள் அவளுடையது!
என் கைகள் கசக்க பூ சுடும் கூந்தல் அவளுடையது!
என் மகிழ்ச்சியாய் வந்த அவள்என்றும்
எனக்கான எனக்கென ஒருத்தி!




Saturday, November 19, 2011

இழப்பதில்தான் இன்பம்!

நாம் பெற்றவை எல்லாம் ஒன்றை இழந்து தான்,
ஆனால் யாரும் இழக்க தயாராய் இல்லை.
பெற எப்போதும் தயங்குவது இல்லை.
இதை இழக்க மட்டும் ஏனோ துடிக்கிறோம்,
ஊரை கூட்டி நேரம் கேட்கிறோம்,
இதை இழந்ததை நிரூபிக்கவே
கோயிலை சுற்றுகிறோம்.
ஆணாகட்டும் பெண்ணாகட்டும்,
கற்பை இழப்பதற்கே சேர்கிறோம்.
பெண்ணானவள் செல்வியை இழந்து திருமதி ஆகிறாள்,
ஆண் என்பவன் பிரமச்சரியத்தை இழக்கிறான்,
இன்பம் இல்லையேல்
இயற்றமாட்டார் இத்திருமணச்சடங்கை!




Monday, November 14, 2011

எதுவோ நிரந்தரம்!?

நானும் நீயும் நிரந்தரமோ..?
நானே போனபின் நீயிருன்தென்ன அவனிருந்துஎன்ன,
பரமனவன் இருந்தும் என்னக்கென்ன.
யாரோ சொல்லக் கேட்ட நிரந்தரம் என்ற வார்த்தை
நிரந்தரம் என்பதில் நிதர்சனம் ஏதும் இல்லை.
மாறி மாறி போன மொழியை பற்றி
வேள்வி நடத்தி,
மக்களை போட்டு எரித்து அரசியலும் செய்வர்,
எம் மொழி நிரந்தரமோ..?
மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டால் நிரந்தரமென்றாககுமோ,
மாறிப்போனால் நிரந்தரமெங்கே ஆவது.
எதுவோ நிரந்தரம்..?
உணர்ச்சிகளேனும் நிரந்திரமோ..?
இச்சைகளேனும் நிரந்திரமோ..?
நிரந்திரமாயின் பலர் பரத்தையர் சேரியிலேயே குடிகொண்டிருப்பர்,
மாறி மாறி மாற்றங்கள் கண்டு மக்கும்
பூத உடலே நிரந்திரமற்று இருக்கும் போது
அது மேல் கொள்ளும் இச்சை நிரந்தரமென்றாககுமோ..?
காதல் நிரந்தரமோ..?
கல்யாணத்திற்கு பிறகு பிறர்பால் வருவது
கள்ளக்காதல் எனில்,
யாரையோ காதலித்து விட்டு யாரையோ கை பிடிப்பது
கள்ளக்கல்யானம் ஆகாதோ..?
இப்படி கள்ளம் இருப்பது நிரந்திரமாகுமோ..?
கள்ளமேனும் நிரந்திரமோ..?
பழகியதை மாற்ற முடியுமோ,
மனம் போனதையாவது சொல்ல முடியுமோ..?
இந்த பாசமேனும் நிரந்திரமோ..?
பிறகு எதற்கு இத்துனை குழந்தைகள் அநாதை என்ற மதத்தில்..?
பற்றின்றி வாழ்வது வாழ்வு என்றவன் புத்தனவன்,
யாரும் பற்றோடு இராதீர் என்ற
பற்றை  மறந்தும் விடாமல் பற்றி இருந்தவன்,
அவன் பற்று நிரந்தரமோ..?
இதோ என் தேடல்
என் நாள் முடியும் வரை விடை காணாது இருந்தால்,
அதுவரை என் தேடல் நிரந்தம்!

--சித்ரன்