Monday, March 19, 2012

நீ கனவல்ல

ன் கரம் பிடித்து ஆரம்பித்த கடலில்
இன்று நான் மட்டும் தன்னந்தனியாக
நால் கரைகளும் இருளானதே
என் கண்கள் ஏதும் காண மறுக்கிறதே
ஆழம் போய் முத்தெடுத்து 
ஒளியில் உன் முகம் கண்டேன் வழிநெடுகில்
உன் மதி முகம் என் மதி மயக்கி நான் விழவில்லை
நிகழ்திடக் கூடும் என எதிர்பார்க்கும் வேளைக்கும்
நடந்து விட்டதை உணரும் தருணத்திற்கும்
இடையில் நாம் விழுந்து கிடந்ததை உணர்தோம்
மற்ற உணர்வுகள் எலும்பும் முன்
நீ எழுந்து சென்றது தெரியாமல் இன்றும் அதே உணர்வோடு  நான்
மதியில் உன் முகம் கண்டு சிரிக்கிறேன் மூழ்குவது அறிந்தும்
நீ என்னோடு இருப்பது கனவல்ல

கனவுகள் தான் என் வாழ்க்கை!




Tuesday, March 13, 2012

தாயுமானவன் நான்

யிலில் 
என் எதிரில் அமர்ந்து இருக்கும் குழந்தை 
கையை சன்னல் வழி வெளி நீட்ட
அதன் தாயானவள் அதட்டி கை இரண்டை கட்ட வைத்தாள்..
அது கண்டு ரசித்து புன்னகையுடன் தலை திருப்பின்
எதற்கோ அழுகின்ற அந்த குண்டு குழந்தையை 
துக்கி போட்டு, வயிறில் வாய் வைத்து ஊதி
தந்தை சிரிக்க வைக்க போராடிக்கொண்டிருந்தார்..
நானும் இப்படி தான்
திசை மாறி போகும் என் மனதை அதட்டி
அடக்குகிறேன் சில நேரம் தாயாய்
இழந்ததை நினைத்து அழும் பொழுது
தேற்றுகிறேன் தந்தையாய்!
என் மனதிற்கு தாயுமானவனாய் நான்!!!





Saturday, March 3, 2012

கர்மம்

ரணம் வருதல் யாரும் அறிவதும் இல்லை,
போபவன் அறியாவண்ணம் அது வந்து கடந்து போவதும் இல்லை
மூச்சை விட்டபின் யாது நிகழ்வென்று அறியா போது
அதை சாபம் என்று கூறுதல் பகுத்தறிவில்லை!
போகின்ற காலம் நெருங்கும் போது 
யாவையில் இருந்தும் விலகி வாழ்வது நன்று
காலன் அவன் இழுக்கும் தருணம் 
அங்கத்தில் உயிர் சிக்கிட சிதைந்திட கூடும்!
நம் தாகம் தீர்க்க செய்த செயல் தந்த பலன்கள் யாவைகும் 
வழி செய்து தருதல் கடன் என்று ஆகும்.
இந்த கடனும் கர்மமென்றாகும்..!
நம் வழி பயணம் துடங்க துணை ஒன்று தேடுதல்
இணை என்று கொண்ட பின் 
இணங்கி நடத்தல் முறையென்று கொள்க!
இந்த முறையும் கர்மமென்றாகும்..!
மனம் கொண்டதில் சென்று
தொழில் செய்து பணம் பார்த்தல்..
கற்றது கொண்டு செயல் செய்து வாழ்தல்..
பதின் காலம் எல்லாம் கலைகள் செய்தல்..
நட்பு பாராட்டி சிரித்து அழுது
அடித்து சேர்ந்து ஒழுகுதல்
தாயும் தந்தையையும் மதித்து நடத்தல் கடமை என்னும் கர்மம்!
வெளிவரும் வழி தடங்கள் இன்றி இருத்தலும்
தண்ணீர் குடத்தில் மிதக்கும் தருணம் வளரும் யாவையும்
குடம் நோக்கியே பயணம் முதல் தொடங்கும்  கர்மம்
எங்கிருந்து ஒட்டி வருகிறது என்று அறிந்து யாது செய்ய?

இனி செய்யும் கர்மம் ஏதோ பார்த்து செய்க..



Friday, March 2, 2012

நம்பப்படவேண்டியவர்

டவுள்,
யாருக்கும் நிரூபிக்க படவேண்டியவர் அல்ல,
நம்பப்படவேண்டியவர்
அவர் இனி தருவதற்கு ஏதும் இல்லை என!
நம்முள் இருக்கும் நம்பிக்கை என்னும் விதை
அது ஒன்று போதாதா?
இன்னும் அவர் மேல் நம்பிக்கை இல்லாமல்
அவர் பால் கோவிலுக்கு சென்று கேட்பது வேண்டாம்!



Wednesday, February 29, 2012

இவ்வுறவை யாதென கொள்வேன்?

காலம் கடந்தும் கதைக்க செய்யும்
காதல்!
முதல் இரவோடு முடித்துக்கொள்ள துடிக்கும்
இச்சை!
காதல் என்ற சொல்லிற்கு காமம் என்ற பொருள் உண்டு
இச்சை என்ற சொல்லிற்கு காதல் என்ற பொருள் உண்டு
காமம் கடந்தும் இருந்துவிடின் காதல் என்று கொள்க
காதல் முடிந்தவுடன் இருக்க ஏதும் இல்லை எனில் இச்சை என்று கொள்க
இச்சை தீர்ந்த பின்பே உறுதிபட சொல்ல முடியுமோ காதலா என்று?
எதுவாயினும் நீ இன்றி என்னால் 
சுகமொடும் சுமையோடும் காலம் தள்ள முடிகிறதே
இவ்வுறவை யாதென கொள்வேன்?







Thursday, February 9, 2012

கேட்பாயாக.. ஏற்பாயாக..


கேட்காமல் எதுவும் கிட்டுவதில்லை
தட்டாத கதவுகள் திறக்கப்படுவதில்லை
ஏதோ வேகத்தில் வார்த்தைகளை தூக்கி எரிய வரும் துணிவு
அதை மறந்திடச் சொல்லி கேட்க வருவதில்லை
போகும் வரை கேட்காமல் போய்விடுவேன் என
நான் இன்று துணியவில்லை
போகும் வரை தோழன் உன் தோள் அல்லாது
என் நாட்கள் நான் கடக்க வேண்டும் என்று துணிந்து நிற்கிறேன்.
சொன்னா வார்த்தைக்காக கேட்க வரவில்லை
நீ சொல்லி இருக்கக்கூடாது? என்ற என் மேல் உன் நம்பிக்கைக்காக
கேட்பாயாக என் மன்னிப்பை ஏற்பாயாக!
நட்பின் துதி பாடி நான் உன் நண்பன் என்ற கர்வத்தோடு கேட்கிறேன்
மன்னிப்பாயாக என்னை நீ!



Sunday, January 29, 2012

இன்றே செலவு செய்!

நேற்று இறந்தவன்
இன்று வருவதில்லை,
வெட்டியாய் செலவாகும் இன்று
அவனுக்காக அழுவதில்!
நாளை என்பது எவனுக்கோ எழுதப்பட்டது
இன்று என்பது மட்டுமே  நம்மோடு
நமக்காக நடந்து வருவது!
ஒரு நொடி பயத்தில் கொலையும் செய்யலாம்
துணிச்சல் இருந்தால் மட்டுமே வாழ முடியும்
இறகில்லா விட்டில் பூச்சிக்கு
நெருப்பில் கூட மோட்சமில்லை!
மரணம் என்பது எப்படியும் வரலாம் ஆனால்
வாழ்வு வரைமுறைக்கு உட்பட்டது,
முறைகளும் இன்று வாழ வழி செயும்மாறு நாம் வரைதல் நன்று!
மரணமும் முடிவல்ல,
காதலில் தோற்பது
கவிதை எழுதுவதற்காக அல்ல
நேற்றைய செலவுகள் எல்லாம் இன்று வரவாவதில்லை
மிஞ்சியது எல்லாம் வரவு என்று கொள்வதில் தவறில்லை!
யாருடைய வெற்றியையும் யாராலும் கணிக்க முடியாது
ஜோதிடமும் ஒரு நொடி கணக்கு தான்
தவறுகளுக்குச் சாத்தியம் உண்டு!
கண்ணீர் யார் தாகத்தையும் தீர்க்காது
வருந்தும் நேரம் எல்லாம் வாழ்ந்த நாளில் சேராது
வானம் எல்லை என்றால்
நிலவில் நீர் ஆராய்ச்சி நடக்காது!
தொற்றவனுக்கு வெற்றி அடுத்த குறி
வென்றவனுக்கு அடுத்த தேடுதல் வெற்றியை தக்க வைக்கும் வழி
வெற்றியோ தோல்வியோ இன்றே செலவிட்டு விடு..
செலவுகள் போக மிச்சம் இருப்பதுதான்
லாபம், நிகர லாபம்!