நம் பொறுமையின் குடம் தீரும்வரையில்..
இவர்தம் காதுகள் கேளாது!
ஒருநாளில் குற்றம் குறைக்க மந்திரம் ஏதும் தெரியாத நாய் மந்திரி இவர்!
ஏதும் ஒருநாளில் நடந்திடாதெனில்,
விலை உயர்வு மட்டும் எப்படியோ..
காலைப் பத்திரிக்கையிலும், மாலை பத்திரிக்கையிலும்
மாறி மாறி ஒரேநாளில் ஏறிவரும்..?
கொஞ்சம் கொஞ்சமாய் பரவி,
தலையை தாக்கும் விஷம்...
உம்ம விலை உயர்வும் அதுபோல் தானே..?
கொஞ்சம் கொஞ்சமாய் பரவும் போது பாராளுமன்றத்தில்
யார் பெண் மயிரில் பூச்சுடிக்கொண்டிருந்திர்..?
பணம் பணம் என கேட்டுப் பிடுங்கும்,
பரத்தையர் சேரியானது உம்ம அலுவலகம்…
நீர் இன்னும் அறிந்திருக்கமாட்டீர்!
அமாவாசையும் எமகண்டமும் பார்த்து பார்த்து,
மனு வாங்கும் இடம் பெயர் அறிவாலயமாம்,
இவர் மூடநம்பிக்கை ஒழிக்கும் ஒளிதருவாரம்!
அம்மா என்ற சொல்லே கேடவார்தையாக்கிவிட்டார்!
எம் முதுகு தோல் உரித்து..
என்னகே இலவச செருப்பு தருவர் ..
அதன் அச்சு உம்ம கன்னத்தில் பதியும் நாள் வரும்!
நீர் போடும் சட்டமும் வரியும்,
வந்தவன்தான் ஏற்பாரோ இல்லை..
போபவன்தானே என பொருப்பாரோ!
போட்ட சாலைக்கு வாகனம் செல்ல வரியாம்
இதில் சுங்க வரி என்று ஒவ்வொரு முக்கிலும் இன்னும் கேட்பாராம்,
பணம் கொண்டவன் கட்டித் தொலைப்பான்,
மானம் கொண்டவனே தட்டிக் கேட்பான்!
கிழக்கில் விடியவில்லை என்றாலென்ன,
இதோ மேற்கே ஒளி தெரிகிறது..
உமக்கு கிலி காட்ட வரும்!
புரட்சிகள் மீண்டும் வரும்..
அன்னியருக்கு எதிராய் மட்டும் கண்டிருப்பீர் இங்கு,
இதோ ஆளத்தெரியாதவருக்கு
எதிராய்…
அதிகார போதையில் திளைப்பவருக்கு எதிராய்!
இன்னுமா கேட்கவில்லை உமக்கு அந்த சத்தம்
காதைத் திறந்துவையும்!
பெற்ற அப்பனே ஆனாலும்
தவறென்று பட்டபின் பாசம் அறுத்து
ஊர் பார்க்க உலகம் கேட்க
உடனே அவன் தலை கொய்யும் துணிவு வரும் வரை கேட்கும்..
இந்த ஈனம் கெட்ட
நாய்களின் குரைச்சல்...!